மாசி மக உற்சவ கொடியேற்றம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
03:59

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மாசி மக உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்திபெற்ற பூவராகசுவாமி கோவில் மாசி மக உற்சவம் விமரிசையாக 23 நாட்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டு மாசி மக உற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.மூலவர் பெருமாள், அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடியேற்றம் நடந்தது. உற்சவம் நடக்கும் அனைத்து நாட்களும் தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை 13ம் தேதி இரவு தங்க கருட சேவை,15ம் தேதி அனுமந்த வாகனம், 16ம் தேதி யானை வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. 17ம் தேதி அதிகாலை ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து கிள்ளை சமுத்திர தீர்த்தவாரிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது.வரும் 18ம் தேதி அதிகாலை சேத்தியாதோப்பு தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் உற்சவமும், 19ம் தேதி கிள்ளை கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரியும் நடக்கிறது. தொடர்ந்து 20ம் தேதி மகத்துவாழ்க்கை மண்டகப்படி, 24ம் தேதி புவனகிரியில் முத்துப்பல்லக்கில் வீதியுலா, 25ம் தேதி சிறப்பு திருமஞ்சனமும் நடக்கிறது. தொடர்ந்து 26ம் தேதி குமாரகுடி, கானூர் வழியாக நாச்சியார்பேட்டை, பாளையங்கோட்டை, ராமாபுரம் கிராமங்களில் உற்சவம் நடந்த பின்னர் அடுத்த மாதம் மார்ச் 4ம் தேதி பெருமாள் ஸ்ரீமுஷ்ணம் எல்லைக்கு வந்து சேருகிறார்.எல்லையில் சுவாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மார்ச் 6ம் தேதி கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் மதனா மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X