| நிழற்கூரை தேவை மக்கள் கோரிக்கை Dinamalar
நிழற்கூரை தேவை மக்கள் கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
04:48

ஆனைமலை:ஆனைமலை அடுத்த சோமந்துறைசித்துாரில், நிழற்கூரை வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆனைமலை அடுத்த சோமந்துறைசித்துார் நுாலகம் அருகேயுள்ள பஸ் ஸ்டாப்பில், பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் நின்று செல்கின்றன.இந்தப்பகுதியை மக்கள் பிரதான பஸ் ஸ்டாப்பாக பயன்படுத்துகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில், அதிக அளவிலான பள்ளி, கல்லுாரி மாணவர்கள், விவசாயிகள் பஸ் ஸ்டாப்பில் நின்று, ஆனைமலை, கோட்டூர் மற்றும் பொள்ளாச்சி பகுதிக்களுக்கு செல்கின்றனர்.அதிக அளவிலான மக்கள் பஸ் ஸ்டாப்பை பயன்படுத்தியும், இப்பகுதியில் நிழற்கூரை கட்டப்படாமல் உள்ளது. இதனால், வெயிலிலும், மழையிலும் ரோட்டிலேயே நின்று பஸ் வசதி பெறும் அவல நிலை நீடிக்கிறது.மக்கள் சிரமமின்றி பஸ் வசதி பெற, ஊராட்சி நிர்வாகத்தினர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை அமைக்க வேண்டுமென்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X