பறவைகளை பாதுகாக்க மாணவர்கள் விழிப்புணர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
04:54

கோட்டூர்:கோட்டூர் அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளி மாணவர்கள், பறவைகளை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி நடத்தினர்.கோட்டூர் அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவர்கள், பறவைகளை பாதுகாக்க வலியுறுத்தி, நேற்று பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ரெட்டியாரூரில் இருந்து, அர்த்தநாரிபாளையம் வரை பேரணியாக சென்று, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பறவைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம், பறவைகளால் ஏற்படும் நன்மைகள் பற்றி தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரம் வழங்கினர்.இப்பள்ளி மாணவர்கள், பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே சட்டியில், உணவு மற்றும் நீர் வைத்து பறவைகளை பாதுகாத்து வருகின்றனர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'சூழலை பாதுகாப்பதில் பறவைகள் பெரும்பங்கு உள்ளது. பறவைகள் உட்கொள்ளும் பழங்களின் விதைகள், அதன் கழிவின் வழியாக பரவி சூழல் மேம்படுகிறது. காடுகள், மரங்கள், நீர் நிலைகள் அழிந்து வருவதால், பறவைகளின் வாழ்விடம் பறிக்கப்பட்டு, அவைகள் அழிந்து வருகிறது. பறவைகளை பாதுகாக்க மக்கள் அனைவரும் முன்வர வேண்டும்,' என்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X