அணையின் நீர்த்தேக்கப்பகுதிக்குச் செல்லும் வனப்பாதை துண்டிப்பு!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
05:04

மேட்டுப்பாளையம்:சிறுமுகை அருகே, அம்மன் புதுாரிலிருந்து பவானி சாகர் அணையின் நீர்த் தேக்கப்பகுதிக்கு செல்லும் வனப் பகுதியில் அமைந்துள்ள பாதையை, சிறுமுகை வனத்துறையினர் குழி தோண்டிதுண்டித்தனர். இதற்கு, நீர்த் தேக்கப்பகுதியில் விவசாயம் செய்வோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.பவானி சாகர் அணையின் நீர்த் தேக்கப் பகுதி, பல ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. அணையில், 105 அடிக்கு நீரை தேக்கினால், நீர்த்தேக்கப் பகுதிகள் நீரில் மூழ்கும். அணையில், 80 அடிக்குக் கீழ் தண்ணீர் குறைந்தால், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்த்தேக்கப் பகுதிகளில், விவசாயம் செய்கின்றனர்.இந்த நீர்த்தேக்கப் பகுதி அருகே, சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட அடர்வனம் உள்ளது. தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தில் விவசாயம் செய்வோர், சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதி வழியாக செல்கின்றனர். அறுவடை செய்த விளை பொருட்களை, வாகனங்களில் சென்று எடுத்து வருகின்றனர்.இதனால், வனவிலங்குகள் தொந்தரவுக்கு உள்ளானதுடன், அவ்வப்போது மனித - விலங்கு மோதல் ஏற்படும் சூழலும் நிலவியது.கடந்த ஆறு மாதங்களாக அணையில் தண்ணீர், 90 அடிக்குக் குறையாமல் இருந்தது. தற்போது அணையில் தண்ணீர் குறைந்துள்ளது. இதனால் மீண்டும் நீர்த்தேக்கப் பகுதியில் விவசாயம் செய்யும் பணியைத் துவங்கியுள்ளனர். இந்நிலையில், பவானி சாகர் அணை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சீனிவாசன், சிறுமுகை வனச்சரக அலுவலருக்கு விடுத்துள்ள அறிக்கையில், 'சிறுமுகை வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அம்மன்புதுார், லிங்காபுரம் ஆகிய வனச் சோதனை சாவடிகள் வழியாக பட்டா நிலம் மற்றும் குத்தகைதாரர்கள் தவிர வேறு எவரும் விவசாய நடவடிக்கைகளுக்காக தளவாடங்கள், இடுபொருட்களை கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும். வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள வனப்பகுதி வழியாக மேற்படி நடவடிக்கைகள் ஏதும் இருப்பின் தடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று காலை, அம்மன் புதுாரிலிருந்து பவானி சாகர் அணையின் நீர்த் தேக்கப்பகுதிக்கு செல்லும் வனப் பகுதியில் அமைந்துள்ள பாதையில், வாகனங்கள் செல்ல முடியாத படி, சிறுமுகை வனத்துறையினர் குழி தோண்டினர். பாதை வெட்டப்பட்டதால், நீர்த்தேக்கப் பகுதியில் விவசாயம் செய்வோர், பொக்லைன் இயந்திரத்தை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.பவானி சாகர் நீர்ப் பரப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பொம்மன் கூறியதாவது:அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் சுமார், 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, விவசாயம் செய்து வருகிறோம். அறுவடை செய்யும் விளை பொருட்களை, வனப்பகுதி வழியாக, காலம் காலமாக வாகனங்களில் எடுத்து வருகிறோம். வனத்துறையினர் தற்போது, வனப்பகுதி வழியாக யாரும் செல்லக்கூடாது என, வழித்தடத்தில் குழி தோண்டியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.கொல்லவும் கூடும்!சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் கூறுகையில், ''சென்னை ஐகோர்ட் உத்தரவுப் படி, பவானி சாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில், சோலார் மின்வேலிகள் அகற்றப்பட்டன. மின்வேலிகள் இல்லாததால், யானை உள்ளிட்ட விலங்குகள் நீர்த்தேக்கப் பகுதிக்கு வர வாய்ப்புள்ளது. அங்கு விவசாயத்தில் ஈடுபடுவோரை தாக்கவும் கொல்லவும் கூடும். மனித - விலங்கு மோதல் ஏற்படும். இதைத் தவிர்க்க, விவசாயம் செய்யும் பெயரில் யாரும் வனப்பகுதி வழியாகச் செல்ல வேண்டாம் என, பாதைகளை வெட்டியுள்ளோம்,''என்றார்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X