டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கு மாதிரி தேர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
05:52

ராமநாதபுரம்:டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 நேர்காணல் பணியிடங்களுக்கான முதன்மை தேர்வுக்கு மாதிரி தேர்வை சுரேஷ் ஐ.ஏ.எஸ்., அகடாமி பிப்.,16ல் நடத்துகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று ஆண்டு

களாக கல்வி சேவையில் ஈடுபட்டு வரும் சுரேஷ் ஐ.ஏ.எஸ்.,அகடாமியில் 2018ல் நடந்த குரூப்-2 தேர்வில் 113 பேர் தேர்ச்சி பெற்று அரசுப்பணியில் உள்ளனர். பிப்.,16ல் காலை 9:00 மணிக்கு குரூப் 2 முதன்மை தேர்வுக்கு மாதிரி தேர்வு

நடைபெறவுள்ளது.

ராமநாதபுரம் மற்றும் அனைத்து மாவட்ட போட்டியாளர்களும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்பவர்களுக்கு அகடாமியின் இலவச பாடக்

குறிப்புகள், நடப்பு நிகழ்வுகள், விரிவான

விளக்கங்களுடன் விடைகள் இலவசமாக

வழங்கப்படுகிறது. ஹால் டிக்கெட், 2 போட்டோவுடன் வரவும். தொடர்புக்கு 75503 52916, 75503 52917 வெளி மாவட்டங்களில் இருந்து வரும் இரு

பாலருக்கும் விடுதி வசதி செய்து தரப்படும், என

நிறுவனர் து.சுகேஷ்சாமுவேல் தெரிவித்தார்.

அதிவேக இணையதளம்

விழிப்புணர்வு ஊர்வலம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் பி.எஸ்.என்.எல்., சார்பில் 'பாரத் பைபர்' அதிவேக இணையதள திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ராமநாதபுரத்தில் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் உதவியுடன் அதிவேக இணையதள இணைப்பு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 777 ரூபாய்க்கு தினமும் 18 ஜிகா பைட்டும், 1,277 ரூபாய்க்கு தினமும் 25 ஜி.பி., வழங்கப்படுகிறது. சேவை கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலம் வழங்கப்படவுள்ளது.

இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சார்பில் ஊர்வலம் நடந்தது.

காரைக்குடி மண்டல முதன்மை பொது மலோளர் ராஜம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். உதவி பொதுமேலாளர் எஸ்.ராஜேந்திரன், கோட்ட பொறியாளர் அந்தோணிராஜ் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று

மீண்டும் அலுவலகத்தை அடைந்தது.

பாம்பன் பாலத்தில்

புதிய கர்டர் இணைப்பு

ராமேஸ்வரம்:பாம்பன் ரயில் பாலத்தில் பலமிழந்த இரும்பு கர்டரை அகற்றி புதிய கர்டரை ரயில்வே ஊழியர்கள் பொருத்தினர். நுாற்றாண்டு விழா கண்ட பாம்பன் ரயில் பாலத்தில் 146 துாண்கள் உள்ளன.

இத்துாண்கள் இடையில் உள்ள இரும்பு கர்டர்கள், தண்டவாளம் உப்பு காற்றில் சேதமடைந்து பலம் இழந்தது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல கோடி ரூபாய் செலவில் 50க்கும் மேற்பட்ட இரும்பு கர்டர்களை அகற்றி புதிய கர்டர்கள் பொருத்தும் பணி நடக்கிறது.

அதன்படி நேற்று துாக்கு பாலம் அருகில் உள்ள பலம் இழந்த இரும்பு கர்டர்களை நகரும் கிரேன் மூலம் ரயில் ஊழியர்கள் அகற்றி புதிய இரும்பு கர்டரை பொருத்தினர். மேலும் சில பலம் இழந்த இரும்பு கர்டரை அகற்றி புதிய கர்டர் பொருத்தும் பணி நடக்க இருப்பதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

தகராறு: 2 பேர் கைது

ராமநாதபுரம்:ராமநாதபுரம் வ.உ.சி., நகரை சேர்ந்தவர் சின்னத்துரை 65. இவரது மனைவி வள்ளி 60. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனை வள்ளி திருப்பி கேட்டதால் தகராறு ஏற்பட்டது.

நேற்று முன் தினம் இரவு சின்னத்துரை, அவரது மகன் ஆணிமுத்துவீர் பேசிக்கொண்டிருந்தனர். அங்கு வந்த முத்துப்பாண்டி, அவரது மகன் மணி, மற்றும் அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத 3 பேர் விறகு கட்டையால் தாக்கினர்.

இதில் சின்னத்துரை, வள்ளி, ஆணிமுத்துவீர் காயமடைந்தனர். சின்னத்துரை புகார்படி கேணிக்கரை போலீசார் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டி, அவரது மகன் மணி ஆகியோரை கைது செய்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X