பாம்பன் பாலத்தில் 70 நாட்களாக ரயில் சேவை முடக்கம்: பக்தர்கள்-வியாபாரிகள் வேதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

12 பிப்
2019
08:04
பதிவு செய்த நாள்
பிப் 12,2019 06:58

ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் 70 நாட்களாக ரயில் போக்குவரத்து இன்றி முடங்கியதால் ராமேஸ்வரம் வரமுடியாமல் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் முடங்கினர். இதனால் பக்தர்கள்-வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

கடந்த 1910 முதல் 1913 வரை ஆங்கிலேயர் ஆட்சியில் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் மீது 2054 மீ., நீளத்தில் 146 துாண்களுடன் ரயில் பாலம் அமைத்து 1914 பிப்.,24ல் ரயில் போக்குவரத்து துவங்கியது. அக்காலத்தில் வட, தென் மாநில பக்தர்களை ராமேஸ்வரம் தீவில் இணைக்கும் கேந்திரமாக பாம்பன் பாலம் விளங்கியது.

நாட்டில் கடல் மீது அமைந்த நீளமான ஒரே பாலம் இது தான். இப்பாலத்தை கடந்து சென்னை, நாகை மற்றும் கன்னியாகுமரி, கேரளா, குஜராத் துறைமுகத்திற்கு கப்பல், மீன்பிடி படகுகள் செல்ல பாலம் நடுவில் ஜெர்மனி நாட்டின் பொறியாளர் ஜெர்சர் வடிவமைப்பில் 228 டன்னில் 81 டிகிரி அளவில் திறந்து மூடும் வகையில் துாக்கு பாலம் வடிவமைத்தது முக்கிய அம்சமாகும்.

துரித பணி: இப்பாலம் வரலாற்றில் 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி, பாம்பனில் ஏற்பட்ட பேரழிவால் ரயில் பாலம் சேதம் அடைந்து 124 துாண்கள் ராட்சத அலையால் நொறுங்கியது. இதன் பிறகு 67 நாட்களில் பாலத்தை புதுப்பித்து ரயில் போக்குவரத்தை துவக்கினர்.

பின் 2014 ஜன.,13ல் பாலத்தில் இந்திய கப்பல் மோதி 121வது துாண் சேதமடைந்தது. 7 நாட்களில் இதனை சீரமைத்து மீண்டும் போக்குவரத்து துவங்கியது. 1964ல் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் துரிதமாக பணிகளை முடித்து பாம்பன் பாலத்தில் ரயில் சேவை துவக்கினர்.

பல கோடி பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பாதுகாப்புடன் பயணிக்க கடந்த 104 ஆண்டுகளாக சற்றும் தளராமல் கம்பீரமாக நிற்கும் பாம்பன் பாலத்தில் கடந்த 70 நாட்களாக ரயில் சேவை துவக்காதது ரயில்வே பொறியாளர்கள், உயர் அதிகாரிகள் மீதான நம்பிக்கையை பயணிகள், சமூக ஆர்வலர்களிடம் குறைத்துள்ளது.

ஆமை வேகம்: பாம்பன் பாலத்தில் பழுது பார்ப்பு பணிகள் முடிந்து 13 நாட்கள் ஆன நிலையில் தற்போது ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் பல லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை, தடுப்பு சுவர் அமைக்கும் பணி மந்தகதியில் நடக்கிறது. இதனாலே ரயில் போக்குவரத்தை தாமதப்படுத்துகிறார்களா என பயணிகள் கேள்வி

எழுப்புகின்றனர்.

பல கோடி இழப்பு: 70 நாட்களாக ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை இல்லாததால் 60 சதவீதம் வடகிழக்கு, தென் மாநில பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் தங்களது பயண திட்டத்தை ஒத்தி வைத்தனர். இதனால் ராமேஸ்வரத்தில் கோயில் ரதவீதி, சுற்றுலா தலம், தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் பயணிகள், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடப்பதால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

விரைவில் போராட்டம்: அ.நாகராஜ், ராமேஸ்வரம் லாட்ஜ் உரிமையாளர்கள் சங்க செயலர்: பாம்பன் துாக்கு பாலத்தில் 100 சதவீதம் பழுது பார்த்தல் பணி முடிந்த நிலையில் தற்போது ரயில்வே அதிகாரிகள் அலட்சியத்தால் பாலம் போக்குவரத்திற்காக காத்திருக்கிறது. கடந்த 70 நாட்களாக பல லட்சம் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை இன்றி ராமேஸ்வரம் வெறிச்சோடியது.

இதனால் வர்த்தகம் பாதித்து டீக்கடைக்காரர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாலத்தில் பணி முடிந்தும் ரயில் சேவை துவக்க முன்வராத ரயில்வே அதிகாரியை கண்டித்து 'பாம்பன் பாலம் மீட்பு குழு'வினர் விரைவில் போராட்டம் நடத்த உள்ளனர், என்றார்.

எஸ்.யோகேஷ்வர

கண்ணன், சமூக ஆர்வலர்: பாம்பன் பாலம் வரலாற்றில் முதன் முதலாக ராமேஸ்வரத்திற்கு 70 நாட்களாக ரயில் சேவை இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. வட மாநில பக்தர்களில் 60 சதவீதம் பேர் பயணத்தை தள்ளி வைத்ததால், ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம் இன்றி கலையிழந்துள்ளது. இதனால் ராமேஸ்வரத்தில் பல கோடி ரூபாய் பண புழக்கம் முடங்கியது, வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். இந்நிலை மேலும் நீடித்ததால் வட, தென் மாநில பக்தர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே விரைவில் ரயில் சேவை துவக்க ரயில்வே அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

என்றார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-பிப்-201912:30:35 IST Report Abuse
ஆப்பு பிரயாணிகள், சமூக ஆர்வலர்கள் எல்லோரும் பியூசுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அசத்தலாமே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X