இரட்டைக்கொலை வழக்கு ரவுடி ஆயுதங்களுடன் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
07:03

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை பகுதியில் பாஸ்கரன் தரப்பினர், தர்மா தரப்பினரிடையே ஏற்பட்ட முன் விரோதத்தால் தொடர்ந்து கொலைகள் நடக்கின்றன. 2018ல் பொங்கல் போட்டிகள் நடத்தியபோது இரு தரப்பினரிடையே வாலாந்தரவையில் தகராறு ஏற்பட்டது. இந்த விரோதம் காரணமாக தர்மா தரப்பினர் 2018 மே 20ல் வாலாந்தரவையில் பூமிநாதன், விஜய் ஆகிய இருவரை வெட்டிக் கொலை செய்தனர்.

இதற்கு பழிக்குப்பழியாக 2018 அக்.,16ல் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டு விட்டு வந்த தர்மாவின் தம்பி கார்த்திக், அவரது நண்பர் விக்கி ஆகியோர் வெடி குண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்

றனர்.

ரவுடி கைது: பூமிநாதன், விஜய் கொலை வழக்கில் கைதான வாலாந்தரவையை சேர்ந்த பீஸ்குட்டி என்ற முனியசாமி 40, மீது கேணிக்கரை, ராமநாதபுரம் பகுதியில் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலில் முனியசாமி பெயர் உள்ளது.

இவர் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் பழிக்குப்பழியாக கொலை செய்யும் நோக்கத்தோடு சுற்றி திரிந்தவரை கேணிக்கரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X