கொடைக்கானலில் கடையடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சுற்றுலா பயணிகள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
07:13

கொடைக்கானல்:கொடைக்கானலில் விதிமீறல் கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கும் உத்தரவால் வாழ்வாதாரம் பாதிப்பதாக நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. நகரே வெறிச்சோடியதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.கொடைக்கானல் நகராட்சியில் 1993 மாஸ்டர் பிளான் திட்ட வரையரையை மீறி கட்டப்பட்ட 1,415 கட்டடங்களுக்கு 'சீல்' வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதையடுத்து நகராட்சி சார்பில் குழுக்கள் அமைத்து வீடு, வணிக, வளாகம், தங்கும் விடுதிகளை ஆய்வு செய்தது.ஏற்கனவே 39 கட்டடங்களில் மின் இணைப்பு துண்டிப்பு, 43 கட்டடங்களுக்கு 'சீல்' போன்ற நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்தனர். தற்போது மேலும் 1,415 கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கும் நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்டோர் முதல்வரை சந்தித்து மாஸ்டர் பிளான் திட்டத்தை திருத்தியமைக்க வலியுறுத்தினர்.நேற்று அனைத்து பொது நலச்சங்கங்கள், வணிகர்கள், ஓட்டுனர் நலச்சங்கங்கள் சார்பில் கடையடைப்பு நடத்தினர். வாடகை கார்கள் இயக்காததால் பயணிகள் வெளியில் செல்லாமல் முடங்கினர்.சென்னை பயணி ராமநாதன் கூறியதாவது:குடும்பத்துடன் மூன்று நாள் சுற்றுலா வந்தோம். விடுதியில் இருந்தபோது கடையடைப்பு, வாகனங்கள் ஓடாது என தெரிந்தது. குழந்தைகளுடன் அவதிப்படுகிறோம். வாழ்வாதார பிரச்னைக்காக போராட்டம் நடத்துவது ஏற்புடையதே. இருந்தாலும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே அறிவித்து இருந்தால் சிரமம் ஏற்பட்டிருக்காது. அருகில் உள்ள ஏரி, பூங்கா, கோக்கர்ஸ்வாக் பகுதியை மட்டுமே பார்த்தோம். வாடகை கார்கள் ஓடாததால் முக்கிய பகுதிகளை பார்க்க முடியவில்லை. தனியார் மருத்துவமனை உணவகத்தில்தான் உணவு கிடைத்தது, என்றார்.சமூக ஆர்வலர் ரவிக்குமார் கூறியதாவது:கட்டட விதிமீறல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தற்போது நீதிமன்றம் 'சீல்' வைக்கும் நடவடிக்கைக்கு உத்தரவிட்ட பின், அனைவரும் அவசர நடவடிக்கைகளில் இறங்குகின்றனர். புதிய மாஸ்டர் பிளான் கொண்டு வருவதென்றால் கடைக்கோடி மக்கள் வரை இடம் பெற்றிருக்கும் திட்டம் வர வேண்டும். வரும் காலங்களில் விதிமீறல் கட்டடங்கள் உருவாக யாரும் முயற்சிக்காத வகையில் சட்டத்தின் பிடி இறுக வேண்டும், என்றார்.சமூக ஆர்வலர் மகேந்திரன் கூறியதாவது:நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது என்றாலும் 'சீல்' வைப்பதால் சுற்றுலாவை நம்பியுள்ளோரின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. அரசு அலுவலகங்கள், நகராட்சி கட்டடங்களும் விதிமீறலில் அடங்கும். அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இதற்கு காரணமானவர்களே. அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மக்களின் வாழ்வதாரத்தை பாதிக்கும் இப்பிரச்னையில் நீதிமன்றம் அவகாசம் அளிக்க வேண்டும். விசாரணை ஆணையம் அமைத்து ஒரு முறை நடைமுறைப்படுத்தும் கட்டட விதியை ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.விதிமீறலுக்கு யார் பொறுப்புநகராட்சியில் வருவாய் கொழித்த அதிகாரிகள் பலர் உள்ளனர். 1993 க்கு பின் சீட்டுகட்டுகளாக கட்டடங்கள் எழுந்தன. அப்போது விதிகள் நிர்ணயித்த அதிகாரிகள், வளம் கொழித்த உள்ளாட்சி அமைப்புகள், இன்று நீதிமன்ற உத்தரவு குறித்து நியாயம் பேசுகின்றனர். தற்போது மக்களின் வாழ்வாதாரத்தை முன்வைத்து, தங்களை காப்பாற்றிக் கொள்ள அந்த நபர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இந்த விதிமீறலுக்கு யார்தான் பொறுப்பேற்க போகின்றனர் என்பது நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையை பொறுத்தே அமையும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X