வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
08:54

வீரபாண்டி: வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த, ஒன்பது பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.


ஆட்டையாம்பட்டி அருகே, ராஜாபாளையம் ஆர்.பொத்தாம்பட்டியில் பாஸ்கர் என்பவர் நாட்டு மாட்டுப்பண்ணை வைத்துள்ளார். இவரது தாய் நல்லம்மாள், 76, பண்ணைக்கு அருகே தனியாக வசித்து வருகிறார். இவரது கணவர் சுப்பிரமணி கடந்தாண்டு இறந்ததையடுத்து, தனியாக இருக்கும் இவர் தினமும் காலை, 5:00 மணிக்கு மாட்டுப்பண்ணைக்கு சென்று பால் கறந்து கொடுப்பார். அவரது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள, பேத்தியின் கணவர் வெளியூர் சென்றுள்ளதால், கடந்த ஒரு வாரமாக நல்லம்மாள், பேத்தியுடன் அவரது வீட்டில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டை பூட்டி விட்டு பேத்தி வீட்டில் படுத்தவர், நேற்று காலை பால் கறக்க மாட்டுப்பண்ணைக்கு சென்றார். அப்போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை பார்த்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த ஏழு பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுனில் இரண்டு மோதிரங்கள், 8,000 ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X