அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
16:52

ஊருக்கு உபதேசம்; உங்களுக்கு யாரு? மணல் கடத்தி பிடிபட்ட, 15 ராட்சத கொப்பரைகள், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், திறந்த வெளியில் போட்டு வைக்கப்பட்டுள்ளன. வெகு நாட்களானதால் துருப்பிடிக்க தொடங்கியுள்ளன. அரசு அலுவலகங்களில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க, தூய்மை பாரதம் திட்ட வலியுறுத்துகிறது. மக்களுக்கு உபதேசிக்கும் அதிகாரிகள், தாங்கள் செயல்படுத்த மறக்கின்றனர். சுற்றுப்புற தூய்மை கருதி, கொப்பரையை ஏலம் விட, அதிகாரிகள் முயற்சிக்கலாமே?


பிரிவு சாலையில் விபத்து அபாயம்: கவுந்தப்பாடி-ஆப்பக்கூடல் சாலையில், வைரமங்கலம் பிரிவு சாலையில், குறுகிய திருப்பம் உள்ளது. இந்த சாலையில், வாகனங்கள் அசுர வேகத்தில் திரும்புகின்றன. அகல பரந்து விரிந்த சாலை என்பதால், இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. பெரியளவில் சாலை விபத்து நடக்கும் முன், குறுகிய திருப்பத்தில் வேகத்தடை அமைக்க, வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பாதியில் நின்ற பணியால் அவதி: அந்தியூர், எண்ணமங்கலம் பஞ்., எண்ணமங்கலம் - கோவிலூர் சாலையை, அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதில், ஆலயங்கரடு-செலம்பூர் அம்மன் கோவில் வரை, 5 கி.மீ., தூரத்துக்கு மேல் விரிவுபடுத்துவதற்காக, சாலையின் இருபுறம் குழி தோண்டினர். ஜல்லிகற்களும் கொட்டினர். அத்தோடு மறந்து விட்டனர். இதனால் இவ்வழியே செல்லும் வாகனங்கள், சிறிது அசந்தாலும் தோண்டிய பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகள் பயந்தபடியே செல்கின்றனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X