| அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் Dinamalar
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
16:57

ஈரோடு: ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள, அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் சங்கத்தினர், ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாதந்தோறும், ஒன்றாம் தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும். பத்தாம் தேதி ஆகியும், கடந்த மாதத்துக்கான ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்கவில்லை. அவற்றை உடன் வழங்க வேண்டும். 2018 ஏப்., மாதத்துக்கு பின், பணி ஓய்வு பெற்றவர்களுக்கு, பண பலன்கள் இதுவரை வழங்கப்படவில்லை. அவற்றை உடன் வழங்க வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட தலைவர் சவுகத் அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X