ஈரோடு: பாலியல் புகாரில் சிக்கிய, ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர், அரசு மேல் நிலைப் பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதே பள்ளியில் ஈரோட்டை சேர்ந்த ரமேஷ், 45; வேதியியல் ஆசிரியராக கடந்த, 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். கடந்த பிப்.,6ல், வேதியியல் ஆய்வக வகுப்பில், 12ம் வகுப்பு மாணவியிடம், அத்துமீறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, சக மாணவியர், தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, சி.இ.ஓ., உத்தரவின்படி, ஆசிரியர் ரமேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.