| வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி Dinamalar
வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
17:06

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில், மூன்று முதியவர்கள் பலியாகினர். கிருஷ்ணகிரி அடுத்த, அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி, 72; இவர், தன் மொபட்டில், தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், அவதானப்பட்டி அருகே உள்ள திருப்பத்தில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு திரும்பினார். அப்போது, எதிரே வந்த லாரி மோதி பலியானார்.

* கிருஷ்ணகிரி அடுத்த, மங்கைகோட்டை ஜெய்னூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், 70; இவர், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசியநெடுஞ்சாலை அவதானப்பட்டியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்து, கிருஷ்ணகிரி டேம் போலீசார் விசாரிக்கின்றனர்.


* கிருஷ்ணகிரி அடுத்த, ஜெகதேவியை சேர்ந்தவர் சீனன், 62; இவர், போச்சம்பள்ளி அடுத்த, வேடர்தட்டக்கல்லில் உள்ள, மகள் வீட்டுக்கு, கடந்த, இரண்டு நாட்களுக்கு முன் சென்றார். அப்போது, சாலையோரம் நின்றிருந்த அவர் மீது, அவ்வழியே வந்த சைன் பைக் மோதியது. இதில், படுகாயமடைந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று மதியம் சீனன் இறந்தார்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X