அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
17:21

வாகனங்கள் நிறுத்தம்; ஓட்டுனர்கள் அவதி: குமாரபாளையம், பஸ் ஸ்டாண்டில், இடைப்பாடி பஸ்கள் நிற்கும் பகுதியில் அதிக எண்ணிக்கையில், டெம்போக்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்கள் நிற்கவும், திருப்பவும் முடியாத நிலை ஏற்படுகிறது. பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். பெரும்பாலான பஸ்கள், உள்ளே வராமல் செல்லும் நிலை உள்ளது. ஆகவே, பஸ்கள் நிறுத்துவதற்கு, இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மைதானத்தில் முட்புதர்: எலச்சிபாளையம் ஒன்றியம், உஞ்சனை அருந்ததியர் தெருவில், 40க்கும் அதிகமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. தற்போது, மைதானத்தில், முட்புதர், நெரிஞ்சிமுட்செடிகள் முளைத்துள்ளது. காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யமுடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். முட்புதரை அகற்ற வேண்டும்.


கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? ராசிபுரம் அடுத்த, ஆண்டகளூர்கேட்டில் இருந்து சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அனைத்து நேரத்திலும் பஸ் வசதி உள்ளது. ஆனால், ராசிபுரத்தில் இருந்து, நாமக்கல்லுக்கு குறைந்த பஸ்களே இயக்கப்படுகின்றன. எனவே, பெரும்பாலானோர், ஆண்டகளூர்கேட்டில் இருந்து பயணிப்பதால் நெரிசல் அதிகரித்துள்ளது. பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, ராசிபுரத்திலிருந்து, கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.


சர்வீஸ் சாலையில் வைக்கோல் குவிப்பு: குமாரபாளையம் அருகே, சேலம் - கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பின்புறம், சர்வீஸ் சாலையில் வைக்கோல் போர் போட்டு வைக்கப்பட்டுள்ளது. கார்கள், மினி லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. இரவு நேரங்களில், பலரும் டூவீலர்களில் வேகமாக வந்து நிலைதடுமாறி விழுகின்றனர். விபத்துக்கு காரணமாக இந்த வைக்கோல் போரை உடனே அகற்றி, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பராமரிப்பில்லாத சாக்கடை வடிகால்: பள்ளிபாளையம் அடுத்த, கீழ்காலனியில் வடிகால் செல்கிறது. இதில் குடியிருப்பு கழிவுநீர், மழை நீர் போன்றவை செல்லும். இது, பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், அதிகளவு முட்புதர் வளர்ந்து, கால்நடை மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டது. மேலும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால், தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டு, சுகாதார சீர்கேடாக உள்ளது. மழைக் காலத்தில் சாலையில் மேற்பரப்பில், தண்ணீர் செல்வதற்கும் வாய்ப்புள்ளது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள், வடிகாலை சீரமைக்க வேண்டும்.


 

மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X