ஆட்டோக்களில் கட்டண கொள்ளை: கரூரில் பொதுமக்கள் கடும் அவதி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2019
11:26

கரூர்: கரூரில், பெரும்பாலான ஆட்டோக்களில் அளவுக்கு மீறி கட்டணம் வசூலிக்கப்படுவதால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.


கரூர் மாவட்டத்தில், 900க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், 40க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், கரூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும், ஆட்டோக்களில், நிர்ணயிக்கப்பட்டதை விட, பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, 2 கி.மீ., தூரத்திற்கு, 15 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 1 கி.மீ., தூரத்துக்கும் குறைவாக உள்ள, ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல, 100 ரூபாய் முதல், 120 ரூபாய் வரை, பல ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டணம் வசூலிக்கின்றனர். குறைந்தபட்ச கட்டணம், 60 ரூபாய் என, ஆட்டோ ஓட்டுனர்களே நிர்ணயம் செய்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.



போக்குவரத்து அமைச்சர் வீட்டுக்கு செல்ல 350 ரூபாய்: போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் வீடு, கோவை சாலை, ஆண்டாங்கோவில் கிழக்கு, சரஸ்வதி நகரில் உள்ளது. கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 4 கி.மீ., தூரத்துக்கும் குறைவாக உள்ள சரஸ்வதி நகருக்கு செல்ல, ஆட்டோ ஓட்டுனர்கள், 350 ரூபாய் வசூலிப்பதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.


கரூரில் ஓடும் பெரும்பாலான ஆட்டோக்களில் மீட்டர் இல்லை. இருந்தாலும் போடுவது இல்லை. 60 ரூபாய்க்கு குறைத்து, எந்த ஆட்டோ ஓட்டுனர்களும் ஆட்டோவை இயக்குவதில்லை. வெளியூர்களில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளில், கட்டணம் குறித்த அறிவிப்பு பலகை இல்லை. அரசின் அனைத்து விதிமுறைகளும் மீறப்படுகிறது.


- பி.சக்திவேல், மக்கள் பாதை.


மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அழைத்து செல்லும் போது கூட, அதிக கட்டணம் கேட்டு, பேரம் பேசிதான் அழைத்து செல்கின்றனர். சிறிது நேரம் காத்திருந்தால் கூட, அதற்கு தனியாக கட்டணம் கேட்கின்றனர். குறைந்தபட்சம், 200 ரூபாய் இல்லாமல், கரூரில் ஆட்டோவில் செல்ல முடியாது. ஆம்னி பஸ்களை விட, ஆட்டோக்களில் செல்ல அதிக கட்டணம் கேட்கின்றனர். ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.


- வி.வெங்கடேஷ், ஆத்தூர் பிரிவு.


ஆட்டோக்களில் கட்டணம் வசூலிப்பது, மோட்டார் பொருத்துவது, ஆட்களின் எண்ணிக்கை உள்ளிட்ட, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து, உயர்நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால், அனைத்து உத்தரவுகளும் இங்கு காற்றில் பறக்கின்றன. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், வேடிக்கை பார்க்கின்றனர். சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களை விட, கரூரில் ஆட்டோ கட்டணம் பல மடங்கு அதிகமாக உள்ளது.


- கே.பி.மோகன், கொங்கு நகர்.


முன்பெல்லாம் பிரசவத்துக்கு இலவசம் என, எழுதப்பட்ட ஆட்டோக்களை அதிகம் பார்க்க முடிந்தது. தற்போது, அது போன்ற சேவை மனப்பான்மை கொண்ட ஆட்டோ ஓட்டுனர்களைப் பார்ப்பது அரிதாக உள்ளது. நடந்து செல்லும் தூரத்துக்கு கூட, 50 ரூபாய் கேட்கின்றனர். இரவு நேரத்தில், இன்னும் கூடுதலாக கேட்கின்றனர். கேரளா மாநிலத்தில் உள்ளது போல, ஆட்டோக்களுக்கு நியாயமான கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்.


- ஆர். கிருஷ்ணன், பசுபதிபாளையம்.


இதுகுறித்து, கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன் கூறியதாவது: ஆட்டோவில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பொதுமக்கள் புகார் தந்துள்ளனர். பர்மிட் இல்லாத ஆட்டோக்களும் ஓடுவதாக தெரிகிறது. சாலை பாதுகாப்பு வாரம் தற்போதுதான் முடிந்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில், ஆட்டோ ஸ்டாண்டுகளில் ஆய்வு நடத்தி, அதிக கட்டணம் வசூலிப்பவர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் கேட்டால், 180042 55430 என்ற, இலவச தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் செய்யலாம். சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X