| திருமணமான 10 நாளில் பெண் மாயம்: தாயார் புகார் Dinamalar
திருமணமான 10 நாளில் பெண் மாயம்: தாயார் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 பிப்
2019
08:57

திருச்சி: திருச்சியில் திருமணம் ஆன 10 நாளில் மாயமான பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் விஜயா, 35. இவர் கணவர் சுப்பிரமணி இறந்து விட்டார். இவர் மகள் ரேணுகாதேவி, 19. இவருக்கும், கதிரவன் என்பவருக்கும், கடந்த மாதம், 23ல் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற ரேணுகா தேவி மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, விஜயா கொடுத்த புகாரின் படி, நீதிமன்றம் போலீசார், மாயமானவரை தேடுகின்றனர்.


 

Advertisement
மேலும் திருச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X