அமைச்சர் வழங்கிய நிவாரணத்தொகை வங்கிக் கணக்கில் ஏறவில்லை: விவசாயிகள் புகார்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2019
09:29

குளித்தலை: கஜா புயலில் சேதமடைந்த வாழை சாகுபடி விவசாயிகளுக்கு, அமைச்சர் விஜய பாஸ்கர் வழங்கிய நிவாரண உதவி தொகைக்கான உத்தரவு ஆணையில், 50க்கும் மேற்பட்டோருக்கு பணம் வரவில்லை என, புகார் எழுந்துள்ளது.


கடந்த ஜனவரி, 5ல், குளித்தலையில் நடந்த விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கர், குளித்தலை, நங்கவரம், தோகைமலை ஆகிய குறுவட்ட வருவாய் கிராமத்தில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள், 500க்கும் மேற்பட்டோருக்கு, நிவாரண உதவித் தொகைக்கான உத்தரவு ஆணை வழங்கினார். இதில், 50க்கும் மேற்பட்டோருடைய வங்கிக் கணக்கில், நிவாரணத் தொகை இன்னும் வரவு வைக்கப்படவில்லை.


இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி அண்ணாதுரை கூறியதாவது: புயலால் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகைக்கான உத்தரவு ஆணையை போக்குவரத்து துறை அமைச்சர் வழங்கினார். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமிருந்து ஆதார் அட்டை , வங்கி கணக்கு புத்தகம் நகல் மற்றும் போட்டோக்கள் பெற்றுக்கொண்டு தான் நிவாரணத்திற்க்கான உத்தரவு ஆணை வழங்கினார்கள். ஆனால் இதுவரை என்னுடைய வங்கி கணக்குக்கு தொகை வரவில்லை. இதுகுறித்த குளித்தலை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தேன். என்னைப்போல் பலர் வந்தனர். முறையான அனைத்து ஆதாரமும் கொடுத்தும், அதிகாரிகள் விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


இதுகுறித்து குளித்தலை தோட்டக்கலை துறை அலுவலர் முருகானந்தம் கூறியதாவது: சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண் சரிசெய்யப்பட்டு, மீண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவு ஆணை வழங்கியவர்களுக்கு உரிய நிவாரண தொகை இருப்பில் உள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில், விரைவில் வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X