மதுரை பைபாஸ் ரோட்டில் மண் குவிப்பதால் திணறல்! தூசி எழுவதால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2019
04:00

மதுரை : மதுரையில் வாகனங்கள் நடமாட்டம் மிகுந்த பைபாஸ் ரோட்டின் இருபுறமும் மண் கொட்டப்படுவதால் துாசி எழுந்து வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.


பைபாஸ் ரோட்டில் காளவாசல் - சொக்கலிங்கநகர் இடையே 54 கோடி ரூபாயில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாற்கர மேம்பாலம் கட்டுமானப்பணி நடக்கிறது. பால துாண்கள் அமைக்க குழிகள் தோண்டப்படுகின்றன. இதற்காக அள்ளப்படும் மண்ணை வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்த மணலை பைபாஸ் ரோட்டின் இருபுறமும் கொட்டப்படுகிறது. இந்த ரோட்டில் துாசி, ரோட்டோர தேங்கும் மண்ணால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். அத்துடன் ரோட்டோரங்களில் குவிக்கப்படும் இந்த மண் குவியல்களால் கடும் துாசியும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.



புது நத்தம் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) சார்பில் பறக்கும் மேம்பாலம் பணி நடக்கிறது. இதற்காக தோண்டப்படும் மண் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறு இன்றி பணிகள் நடக்கின்றன.பைபாஸ் ரோட்டில் அள்ளப்படும் மண் அங்கேயே கொட்டப்படுகிறது. தேவைப்படும் போது பயன்படுத்துவதற்காகவே பைபாஸ் ரோட்டில் மண் கொட்டுவதாகவும், மண்ணின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskaran R V - CHENNAI,இந்தியா
19-பிப்-201914:45:10 IST Report Abuse
Baskaran R V டெண்டர் விட்டு பணி தொடங்கிய பிறகு, நெடுஞ்சாலைதுறையோ, மற்ற அரசு அதிகாரிகளோ கண்டு கொள்வதில்லை. அதனால், அந்த குறிப்பிட்ட பணியினை செய்யும் ஒப்பந்தக்காரர், கிடைக்கும் கூலி ஆட்களை வைத்துக்கொண்டு, அதிக லாபம் ஈட்டும் நோக்கத்தில், ஒரு முழுமை இல்லாமல் செய்தால், இப்படித்தான் இருக்கும் என்று கூற தேவை இல்லை. இந்த மாதிரி கட்டு மான பணிகள் நடை பெறும் இடங்களில், நெடுஞ்சாலை துறை அடிக்கடி, பறக்கும் படையுடன் சென்று, நிலைமையை பார்த்து, ஒப்பந்தக்காரரை தகுந்த எச்சரிக்கை செய்தல் வேண்டும். நடக்குமா ? அன்றி, எல்லா இடங்களில் இது சகஜம் தானே என்று கண்டும், காணாமல் விட்டு விடுவார்களா ?
Rate this:
Share this comment
Cancel
Kumaresh - Chennai,இந்தியா
19-பிப்-201906:11:55 IST Report Abuse
Kumaresh மதுரையில் உள்ள avaniyapuram to therkuvasal முழுக்க இந்த தூசி பிரச்சனை பல ஆண்டுகளாக உள்ளன, புகார்கள் கொடுத்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை. மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். நடவடிக்கை எடுக்கபடுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X