சூலூரில் காட்சி பொருளான சிக்னல் : ரோட்டை கடக்க முடியாமல் திணறல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2019
03:36

சூலுார்: சூலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே காட்சி பொருளான சிக்னலால், திருச்சி ரோட்டை கடக்க, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.சூலுார் திருச்சி ரோட்டில், கோவையில் இருந்து, பல்லடம், திருப்பூர், காங்கயம், திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் செல்கின்றன. அதேபோல், கோவை நகர் மற்றும் கேரள மாநிலத்துக்கு செல்ல பல ஆயிரம் வாகனங்கள் வருகின்றன.வாகனங்கள் அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால், திருச்சி ரோட்டை கடக்க பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.பாப்பம்பட்டி பிரிவு, ராவத்துார் பிரிவு, ரங்கநாதபுரம் பிரிவு, கலங்கல் பிரிவு, காடாம்பாடி பிரிவு உள்ளிட்ட இடங்களில், ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு திரும்ப வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக, திருச்சி ரோட்டுடன், கலங்கல் ரோடு, பேரூராட்சி அலுவலக ரோடு சந்திக்கும் இடத்தில், ரோட்டை கடக்க, பொதுமக்கள் பெரும்பாடு படவேண்டியுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, போலீசார் அந்த இடத்தில் இல்லையென்றால், ரோட்டை கடக்கவே முடியாது. திருச்சி ரோட்டில் கிழக்கும், மேற்குமாக செல்லும் வாகனங்களால், கலங்கல் ரோடு வழியாக, கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் திரும்ப முடியாமல், நடுரோட்டில் நிற்கவேண்டியுள்ளது. இதனால், ரங்கநாதபுரம் பிரிவு வரையிலும், பஸ்கள், லாரிகள், கார்கள் வரிசை கட்டி நின்று விடும். இதனால், ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல வழியில்லாமல் போய்விடுகிறது. சூலுார் மக்கள் கூறுகையில், 'கலங்கல் ரோடு, பாப்பம்பட்டி பிரிவு உள்ளிட்ட இடங்களில் பல லட்சம் செலவில் வைக்கப்பட்ட சிக்னல்கள் முடங்கி கிடக்கின்றன. இதை சரிசெய்து இயக்கினால், போக்குவரத்து சீராகும். போலீசாருக்கும் வேலைப்பளு குறையும். ரோட்டை கடக்கும் பெண்கள், முதியவர்கள், பள்ளி மாணவ, மாணவியரின் அவதியும் குறையும்' என்றனர்.லாரி மோதி சேதம்!கலங்கல் ரோடு, திருச்சி ரோடு சந்திக்கும் இடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கடந்த, பல ஆண்டுகளுக்கு முன் சிக்னல் அமைக்கப்பட்டது. சில மாதங்கள் முறையாக செயல்பட்ட சிக்னல்களில் ஒன்று, லாரி மோதி சேதமாகியது. அதன் பின்னர் அவை செயல்படாமல் முடங்கி, காட்சிப்பொருளாக நிற்கின்றன. அதை சரிசெய்து முறையாக பராமரிக்க போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.போலீஸ் பற்றாக்குறையால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரும் முறையாக பணியில் இருப்பதில்லை. இதனால், ரோட்டை கடக்கும் மக்களின் அவதியும் குறையவில்லை.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X