வறட்சி... இதுவே சாட்சி: குளங்களில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை: அன்னூரில் அதலபாதாளத்தில் நிலத்தடி நீர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

20 பிப்
2019
14:40
பதிவு செய்த நாள்
பிப் 20,2019 03:41

அன்னுார்: அன்னுார் வட்டாரத்தில், முக்கிய குளங்கள் ஒன்றில் கூட, ஒரு சொட்டு தண்ணீர் கூட இன்றி, வறண்டு, கைவிடப்பட்ட மைதானம் போல் காட்சியளிக்கின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது; குடிநீர் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது.



அன்னுார் வட்டாரத்தில், ஒரு பேரூராட்சி, 21 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் 19 கிராமங்களும், பேரூராட்சியில், 12 கிராமங்களும் உள்ளன. ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.அன்னுாரிலுள்ள 119 ஏக்கர் குளமும், காட்டம்பட்டியிலுள்ள 240 ஏக்கர் குளமும், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற குளங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த இரு குளங்களிலும், சாக்கடை கழிவு நீர் மட்டும் சிறிதளவு தேங்கி நிற்கிறது. மழை நீர் ஒரு சொட்டு கூட இல்லை.கரியாம்பாளையம், கஞ்சப்பள்ளி, கெம்பநாயக்கன் பாளையம், பொன்னேகவுண்டன்புதுார், செட்டிபாளையம், அல்லிகுளம், பூலுவபாளையம் ஆகிய ஊர்களில், 25 ஏக்கர் முதல் 60 ஏக்கர் வரையிலான பரப்பளவு உள்ள குளங்கள் உள்ளன.இதில் பூலுவபாளையம் குளத்தில் மட்டும் ஐந்து சதவீதம் நீர் நிற்கிறது. மற்ற குளங்களில் நீரே இல்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக குறைந்து விட்டது.




இதுகுறித்து கெம்பநாயக்கன்பாளையம் விவசாயிகள் கூறியதாவது:கடந்த நான்கு மாதங்களாக, மழை இல்லை. கடந்த ஆண்டு பெய்த ஓரளவு மழையால் தேங்கி நின்ற நீரும், சுட்டெரிக்கும் வெயிலில் காணாமல் போய் விட்டது. குளங்கள் மைதானமாக காட்சி அளிக்கிறது.புதிதாக போர்வெல் போட்டால், 1,350 அடிக்கு பிறகே, நீர் கிடைக்கிறது. சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி பயிர்கள் எல்லாமல் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கிறது.கோடை மழை பெய்தால் மட்டும் இருக்கும் பயிர்கள் பிழைக்கும். இல்லாவிட்டால் கருகி விடும். சோளம் போதிய அளவுக்கு விளைச்சல் இல்லாததால், கால்நடை தீவனங்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. அரசு விவசாயிகளை காக்க, குறைந்த விலையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடை தீவனம் வழங்க வேண்டும். வறட்சியை தாங்கி வளரும் பயிர் ரகங்களுக்கான விதை, இடுபொருட்களை மானியத்தில் வழங்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.




அன்னுார் பேரூராட்சியில், ஏழு நாட்களுக்கு ஒரு முறை பவானி ஆற்று நீர் சப்ளையாகி வந்தது. கடந்த ஒரு மாதமாக, 10 அல்லது 11 நாட்களுக்கு ஒரு முறை தான் சப்ளையாகிறது. கிராம ஊராட்சிகளில், 12 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை ஆகிறது. அரசு குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.'வறட்சியை சமாளிக்க லாரிகள் மூலமாவது குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்' என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X