எச்சரிக்கை! 'பெஞ்ச்' தேய்ப்பவர்கள் பட்டியலை வெளியிடுவோம்; தூக்கி அடிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் கொதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2019
07:12

சென்னை மாநகராட்சியில், சுகாதார ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்ததில் குளறுபடி நடந்துள்ளது. இதனால், சிபாரிசில், மூன்றாண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் பட்டியலை வெளியிட, பாதிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.



லோக்சபா தேர்தலையொட்டி, அனைத்து துறை அதிகாரிகளும், இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த கார்த்திகேயன் மாற்றப்பட்டு, பிரகாஷ் நியமிக்கப்பட்டார்.அதேபோல், மாநகராட்சியில், 39 சுகாதார ஆய்வாளர்கள், 20 துப்புரவு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், மண்டல உதவி கமிஷனர்கள், செயற்பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.



இந்நிலையில், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு அலுவலர்கள் இடமாற்றத்தில், குளறுபடி நடந்திருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக, சிபாரிசு மற்றும் பணம் கொடுத்த அதிகாரிகள், ஒரே வட்டாரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஆனால், சுகாதார பணியை மட்டும் மேற்கொள்வோர் மற்றும் உயரதிகாரிகளுக்கு பிடிக்காதவர்களை, இடமாற்றம் என்ற பெயரில் துாக்கியடித்து உள்ளனர்.



இதனால், சிபாரிசு மற்றும் பணத்தால், மூன்றாண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும், மாநகராட்சியின் அனைத்து துறை அதிகாரிகள் பட்டியலை, வெளியிடப் போவதாக, பாதிக்கப்பட்ட, சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து, சுகாதார ஆய்வாளர்கள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கமிஷனரை காட்டிலும், மற்ற அதிகாரிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பணி அமர்த்துவது முதல், பணியிட மாற்றம் வரை, லஞ்சம் கொடுத்தாக வேண்டிய சூழல் உள்ளது.தற்போது, லோக்சபா தேர்தலையொட்டி, இடமாற்றம் நடந்து வருகிறது. இதில், சோழிங்கநல்லுார் மண்டலத்தில் பணியாற்றியவர்களை, மாதவரம் மண்டலத்துக்கு துாக்கி அடித்துள்ளனர்.



தேர்தலில் அதிக பணிகள் இருக்கும் சூழலில், 50 கி.மீ., துாரத்தில் இடமாற்றம் செய்துள்ளனர். மேலும், தேர்தல் நடைபெறும் கால கட்டத்தில், டெங்கு, பன்றி காய்ச்சல்களும் அதிகம் பரவும். இது போன்ற சூழலில், நாங்கள் பணியாற்றுவது கடினம்.ஆனால், சோழிங்கநல்லுார், பெருங்குடி, கோடம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட மண்டலங்களில், பணம் கொடுத்தோர், அரசியல் சிபாரிசில் வந்தோர் என, 30க்கும் மேற்பட்டோர், தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணியாற்றுகின்றனர்.



இவர்களை இடமாற்றம்செய்யாதபோது, எங்களை மட்டும் இடமாற்றம் செய்ததை ஏற்க முடியாது. பாரபட்சமின்றி, அனைவரையும் இடமாற்றம் செய்யவில்லை என்றால், மூன்றாண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணியாற்றும், மாநகராட்சியின் அனைத்து துறை அதிகாரிகள் குறித்த பட்டியலை, விரைவில் வெளியிடுவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.



அடிமையாகும் அதிகாரிகள்!


அரசு அதிகாரிகள், மூன்றாண்டுகள் மட்டுமே, ஒரு இடத்தில் பணிபுரிய வேண்டும். அதன்பின், அவர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால், சென்னை மாநகராட்சியில், பெரும்பாலான அதிகாரிகள், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, ஒரே மண்டலத்தில், பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இதனால், அவர்கள் அரசியல்வாதிகளுக்கு அடிமையாகவே மாறி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A R J U N - PHOENIX ....ARIZONA..,யூ.எஸ்.ஏ
21-பிப்-201911:29:42 IST Report Abuse
A R J U N சென்னை மாநகராட்சியில், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கமிஷனரை காட்டிலும், மற்ற அதிகாரிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.?
Rate this:
Share this comment
Cancel
21-பிப்-201909:55:46 IST Report Abuse
மதுவந்தி மாற்றத்திற்குள் மாற்றம் உண்மைகள் உலாவரும்... வரட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X