போலீஸ் டைரி..,.,.,.
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2019
00:55

50 சவரன் திருடியவன் கைது

போரூர்: போரூரைச் சேர்ந்தவர், மோகன், 58; தனியார் மென்பொருள் நிறுவன ஆலோசகர். இவரது வீட்டின் பூட்டை உடைத்து, ஜன., 6ல், 50 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைர நகை, திருடு போனது. போரூர் போலீசார், திருவண்ணாமலையைச் சேர்ந்த கமலக்கண்ணன், 30, என்பவனை, போரூரில் நேற்று கைது செய்தனர். அவனிடமிருந்து, 40 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

நண்பரை வெட்டியவன் கைது

அம்பத்துார்: வேலுாரைச் சேர்ந்த கண்ணன், 71, பாலா, 42, ஆகியோர், அம்பத்துார், மண்ணுார்பேட்டையில் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, இருவரும் குடிபோதையில் இருந்துஉள்ளனர்.அப்போது, பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கண்ணன், கத்தியால் பாலாவின் கழுத்தில் வெட்டி தப்பினான்.அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், பாலாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, கண்ணனை கைது செய்தனர்.

திருட்டில் ஈடுபட்ட ரவுடி கைது

ஐஸ்ஹவுஸ்: திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர், சசிகலா, 40. சில நாட்களுக்கு முன், இவரது வீட்டில், 2 சவரன் நகை, 2,000 ரூபாய்திருடு போனது. ஐஸ்ஹவுஸ் போலீசார், திருட்டில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த, ரவுடி பிரகாஷ், 35, என்பவனை, நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

திருடன்களுக்கு, 'குண்டாஸ்'

சென்னை: அனகாபுத்துாரைச் சேர்ந்தவன், கார்த்திக், 26; கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவன் தீட்சமுத்து, 36. இருவரும், வழிப்பறி மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதனால், கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்படி, போலீசார் நேற்று, இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

மது விற்ற இருவர் கைது

கானத்துார்: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டியில், மது விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கானத்துார் போலீசார், நேற்று முன்தினம் இரவு, உத்தண்டி பேருந்து நிலைய பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு மது விற்ற, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த குமார், 24, கோபி, 25, ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பணம் மோசடி செய்த இருவர் கைது

நொளம்பூர்: நொளம்பூரைச் சேர்ந்தவன், சரவணன், 45. இவனது மாமனார் சிவபிரகாசம், 71. இருவரும் சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம், 49 லட்சம் ரூபாயை, கடந்த மாதம் கடனாக பெற்றனர். கடனுக்காக, குடியிருக்கும் வீட்டை எழுதி தருவதாக, ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால், பணத்தை கொடுக்காமலும், வீட்டை எழுதி கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளனர். நொளம்பூர் போலீசார், சிவபிரகாசம் மற்றும் சரவணனை, நேற்று கைது செய்தனர்.

கஞ்சா விற்ற மூவர் கைது

பிராட்வே: பிராட்வே, இரண்டாவது கடற்கரை சாலையில், கஞ்சா விற்பனை நடப்பதாக, வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று முன்தினம், போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த அஜித், 25, ஜோதி 43, திருங்கையான தீபா, 23, ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார், 2.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மொபைல் கடையில் திருட்டு

சிந்தாதிரிப்பேட்டை: கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர், ரகுமான்; சிந்தாதிரிப்பேட்டை, ரிச்சி தெருவில், மொபைல் போன் விற்பனை கடை வைத்துள்ளார். நேற்று காலை, கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டை உடைத்து, 40 மொபைல் போன்கள் திருடப்பட்டது தெரிந்தது. சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

திருவொற்றியூர்: திருவொற்றியூரைச் சேர்ந்தவர், மகேஷ், 36. இவர், நேற்று மாலை, சதானந்தபுரம் பகுதியில் நின்றிருந்த போது, 9 பேர் கும்பல், மகேஷை அரிவாளால் வெட்டி தப்பியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட பொதுமக்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். திருவொற்றியூர் போலீசார், அம்சா தோட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், 23, என்பவன் உட்பட, 9 பேரை தேடி வருகின்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X