வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இரண்டு நாள் சிறப்பு முகாம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2019
01:04

சென்னை:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பாக, இரண்டு நாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதோரின், பெயர் சேர்ப்பதற்கு, நாளை மற்றும் நாளை மறுநாள், சிறப்பு முகாம் நடக்க உள்ளது.இதில், சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட, 16 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 3,754 ஓட்டுச்சாவடி மையங்களில், வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடக்க உள்ளது.இந்த முகாம், காலை, 9:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை நடக்கும்.இந்த முகாம்களில், பெயரை சேர்க்க, படிவம் - 6; நீக்குவதற்கு, படிவம் - 7; திருத்தங்களுக்கு, படிவம் - 8; ஒரே தொகுதிக்குள், முகவரி மாற்றத்திற்கு, படிவம் - 8ஏ ஆகியவற்றை அளிக்கலாம்.மேலும், அனைத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலருக்கும், அவரின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும், மாற்றுத்திறனாளியின் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை குறிப்பெடுத்து கொள்ள, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் நாளன்று, சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க வசதியாக, மாற்றுத்திறனாளிகள், தங்கள் வீட்டிற்கு அருகில் நடக்கும், சிறப்பு முகாமில், வாக்காளர் அடையாள அட்டையின் எண் விபரங்களை அளிக்க வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஓட்டுச்சாவடி நிலை முகவர்களை நியமித்து, சிறப்பு முகாமின்போது, வாக்காளர்களுக்கு சிறந்த சேவை வழங்கி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X