கிள்ளை : சிதம்பரத்தில் பா.ஜ., வேட்பாளர் கண்ணன் ஓட்டு சேகரித்தார்.
சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அ.மண்டபம், கிள்ளை ரயிலடி, கீழ் அனுவம்பட்டில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் போட்டி போட்டு மக்களை இலவசம் என்ற பெயரில் திசை திருப்பி வருகிறது. இரு கட்சிகளும் மக்கள், விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள், இளைஞர்கள், மாணவர்களை பற்றி சிந்திக்காமல் இலவசத்தை மட்டும் முன் வைத்துள்ளனர்.
தி.மு.க., ஆட்சியில் கடந்த முறை அறிவித்ததையே இன்னும் செய்ய முடியாத நிலையில் திண்டாடி வருகின்றனர். தற்போது விலைவாசி உயர்வாலும், மின்தட்டுப்பாட்டாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமா காமெடியர்களை பிரசாரத்தில் இரு கட்சிகளும் இறக்கி விட்டு மக்களை காமெடி செய்கின்றனர். மக்கள் எதையும் நம்பத் தயாராக இல்லை. இவ்வாறு பா.ஜ., வேட்பாளர் கண்ணன் பேசினார்.