| மாவட்ட அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் Dinamalar
மாவட்ட அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 மார்
2019
01:00

ராமநாதபுரம்:நேரு யுவ கேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான கிராம, மகளிர் மன்ற இளைஞர் களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடந்தது.


ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற இளைஞர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனர். நேரு யுவகேந்திராவில் பதிவு பெற்ற 14 மன்றங்களிலிருந்து 120க்கு மேற்பட்டோர் போட்டிகளில் பங்கேற்றனர். 100 மீ., 400 மீ., நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தனிநபர் போட்டிகளும், வாலிபால், கோ-கோ., கயறு இழுத்தல் உள்ளிட்ட குழுப்போட்டிகளும் நடந்தது.


தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களையும் குழு போட்டியில் முதல் இரண்டு இடங்களை வென்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் டி.எஸ்.பி., நடராஜன் வழங்கினார். பரிசளிப்பு விழாவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை முருகன், நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் நோமான் அக்ரம் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X