| செவல்பட்டி சாலையில் மதுபான கடையால் தொல்லை Dinamalar
செவல்பட்டி சாலையில் மதுபான கடையால் தொல்லை
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 மார்
2019
01:15

சாயல்குடி:சாயல்குடி செவல்பட்டி செல்லும் சாலையில் மதுபான கடையும், கண்டெய்னரில் இயங்கும் மதுபான கடையும் அருகருகே அமைந்துள்ளது. சாலைகளை திறந்த வெளி பாராக மதுபான பிரியர்கள் பயன்படுத்துவதால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்த இரு மதுபானக்கடைகளையும் நம்பி புற்றீசல் போல அப்பகுதியின் ரோட்டோரங்களில் ஏராளமான சிறு பெட்டிக்கடைகள் உருவெடுத்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்கள், நகர்ப்பகுதி களை சேர்ந்த மதுபான பிரியர்கள் சரக்கு அடிப்பதற்காக, பெட்டிக்கடைகளை நாடி வருவதால், அப்பகுதி முழுவதும் திறந்தவெளி மதுபான பார்களாக மாறி வருகிறது.


மாலை முதல் நள்ளிரவு வரை குடிமகன்களுக்குள் அடிக்கடி தகராறு, கைகலப்பு ஆகியவை உருவாகி வருவதால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.


புரட்சிகர மாணவர் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் முருகேசன் கூறியதாவது: செவல்பட்டி சாலையில் சரக்கு வாங்கி விட்டு, அருகருகே உள்ள பெட்டிக்கடைகளில் தஞ்சம்புகுகின்றனர். ஒருசில கடைகளில் இங்கு எல்லா நேரங்களிலும் சரக்குகள் தராளமாக கூடுதல் விலையில் கிடைக்கிறது. இதன் வழியாக அரசுப் பள்ளி, மாணவர்கள், விடுதி, ஹவுசிங் போர்டு செல்லும் பாதை அமைந்துள்ளது.


பெண்கள் அச்சத்துடன் செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது. ரோந்து செல்ல வேண்டிய போலீசார் கண்டும், காணாமலும் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம், திறந்த வெளியில் மதுபானம் அருந்தும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X