அரியலுார்: அரியலுார், பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன், 63. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி. 2014ம் ஆண்டு, இவரது வயலில் இருந்த பிளாஸ்டிக் குழாய்களை, மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். எஸ்.பி., - டி.எஸ்.பி., மற்றும் போலீஸ் நிலையத்தில், அசோகன் புகார் செய்தார். நடவடிக்கை இல்லாததால், அரசு ஊழியர்கள், கடமையை செய்யத் தவறியதாக, ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், 2016ல் வழக்கு தொடர்ந்தார். நேற்று விசாரணை நடத்திய, நீதிபதி சக்திவேல், ஜெயங்கொண்டத்தில், டி.எஸ்.பி.,யாக இருந்து, தற்போது, திருவாரூர், முத்துப்பேட்டையில் பணிபுரிந்து வரும் இனிகோ திவ்யன், ஆஜராகாததால், 'பிடிவாரன்ட்' பிறப்பித்து உத்தரவிட்டார்.