சென்னை புறநகர் பகுதிகளில் குடிநீர் பிரச்னை விஸ்வரூபம்! மாற்று ஏற்பாடுகளில் உள்ளாட்சிகள் தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2019
23:28

குரோம்பேட்டை: கோடை துவங்குவதற்கு முன்பே, சென்னை புறநகரில், குடிநீர் பிரச்னை துவங்கி விட்டது. சென்னை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வாரியங்களில் இருந்து, குறைந்தளவு தண்ணீர் கிடைப்பதால், மாற்று ஏற்பாடுகளில், உள்ளாட்சி அமைப்புகள் தீவிரம் காட்ட துவங்கியுள்ளன.


புறநகரில் உள்ள, பல்லாவரம் நகராட்சியில், 2.97 லட்சம் பேர், பம்மலில், 89 ஆயிரம், அனகாபுத்துாரில், 55 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.இந்நகராட்சி மக்களின், குடிநீர் தேவையை, சென்னை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வாரியங்கள் பூர்த்தி செய்கின்றன.பற்றாக்குறைஇவற்றின் மூலம் கிடைக்கும் தண்ணீரை, மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகளில் நிரப்பி, வாரத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில், வினியோகித்து வருகின்றனர்.


ஒவ்வொரு ஆண்டும், கோடையில், வாரியங்கள் மூலம் வழங்கப்படும் தண்ணீரின் அளவு குறையும்.இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏழு நாட்கள் என்பது, 15 நாட்கள், ஒரு மாதம் என அதிகரித்து, ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.அதுபோன்ற நேரங்களில், பணம் கொடுத்து, லாரி தண்ணீர் வாங்கும் சூழலுக்கு, மக்கள் ஆளாகின்றனர்.நகராட்சிகள் மூலம், லாரி தண்ணீர் வினியோகித்தாலும், தனியார் கிணறுகளில் இருந்து தண்ணீரை வாங்கி, சுத்திகரிப்பு செய்து வழங்கினாலும், மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.


தீவிரம்

இதனால், ஏப்ரல், மே மாதங்களில், குடிநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்தாண்டு, கோடை துவங்குவதற்கு முன், குடிநீர் பிரச்னை துவங்கிவிட்டது.இதனால், மாற்று நடவடிக்கைகளில், உள்ளாட்சி அமைப்புகள் தீவிரம் காட்ட துவங்கியுள்ளன.பல்லாவரம் நகராட்சிக்கு, சென்னை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வாரியங்கள் முறையே, 10 மற்றும் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. இது, போதுமானது இல்லை. அதனால், மாற்று நடவடிக்கையாக, ஏழு லாரிகள் தயார் நிலையில் உள்ளன.ஆயத்தம்மூவரசம்பட்டு, கீழ்க்கட்டளை ஏரிகளில், தலா, இரண்டு ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டுள்ளன. செம்பாக்கம் ஏரி, சரஸ்வதி காலனியில், ஆழ்துளை கிணறுகள் போடப்பட உள்ளன. பழைய கிணறுகள் மற்றும் போர்வெல்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.


இதன் மூலம், கோடையை சமாளிக்க அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர்.தனியார் கிணறுகள், 'ரெடி!'மாற்று நடவடிக்கை மூலம் பெறப்படும் தண்ணீர், போதுமானதாக இல்லாத பட்சத்தில், தனியார் கிணறுகளில் இருந்து, தண்ணீரை வாங்கி, சுத்திகரிப்பு செய்து, வினியோகிக்கும் திட்டமும் உள்ளது.பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள், இரண்டு இடங்களில், தனியார் கிணறுகளை தேர்வு செய்து வைத்துஉள்ளனர்.அந்த கிணறுகளில் இருந்து, நாள் ஒன்றுக்கு, 5 லட்சம் லிட்டர் என, ஒரு மாதத்திற்கு எடுக்கலாம். அதேபோல், அனகாபுத்துார் நகராட்சியும், தனியார் கிணறுகளில் இருந்து தண்ணீரை வாங்கி, வினியோகிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கல் குவாரி திட்டம்பம்மல் செங்கழுநீர் கல் குவாரி குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரை, சுத்திகரிப்பு செய்து, பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளுக்கு வினியோகிக்க திட்டமிட்டு, அதற்கான பணி, மூன்று மாதங்களுக்கு முன் துவங்கியது.


இத்திட்டம், கோடையில் முடியுமா என, எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதனால், விரைவில் இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என, நம்பிக்கை பிறந்துள்ளது.இத்திட்டம் பயன்பட்டிற்கு வந்தால், பம்மலுக்கு, நாள் ஒன்றுக்கு, 15 லட்சம் லிட்டரும்; அனகாபுத்துாருக்கு, 10 லட்சம் லிட்டரும் தண்ணீர் கிடைக்கும். இதன் மூலம், கோடையை ஓரளவிற்கு சமாளிக்கலாம்.மாதம் ஒரு முறைபம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளுக்கு, சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் முறையே, 30, 15 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். சமீபகாலமாக, இரு நகராட்சிகளுக்கும் முறையே, 5 மற்றும் 4 லட்சம் லிட்டர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.


அதேபோல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்தும், முறையே, 4 மற்றும் 3 லட்சம் லிட்டர் மட்டுமே, தண்ணீர் கிடைக்கிறது. இதை வைத்து, வாரத்திற்கு ஒருமுறை கூட தண்ணீர் வினியோகிக்க முடியவில்லை. மாதத்திற்கு ஒருமுறை வினியோகிக்கும் சூழல் நிலவுகிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
08-மார்-201917:36:59 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> பலவருஷங்ககளா இருக்கே இந்த குடிநீர்ப்பிரச்சினை எவன் ஆண்டாளும் இந்த இடங்களை சீர் செய்யமாட்டானுக பாவம் அவாளும் விதியே என்று வாழ்ந்து முடிச்சுண்டுருக்கா கொடையே குடிநீருக்கு பஞ்சம் மழையே வெள்ளம் என்று அவதியேதான் வாழ்க்கை என்று இருக்காங்க பாவம் ஆனால் ஆளும் கடிச்சி ஆளாதகாட்ச்சிகளெல்லாம் கோடீலே புரண்டு ஜாலியாயிருக்கானுக வெள்ளையும் சொள்ளையுமா
Rate this:
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
08-மார்-201912:03:56 IST Report Abuse
THANGARAJ சென்னை மற்றும் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களில், வீடுகளில் பயன் படுத்தும் Aquva வாட்டர் பில்டர் தவிர்த்தால் கார்பொரேஷன் குடிநீர் 30%-40 % பிரச்சனையை தீர்க்கலாம். அதே நேரம் மின்சாரமும் சேமிக்கலாம்.
Rate this:
Cancel
rmr - chennai,இந்தியா
08-மார்-201906:31:02 IST Report Abuse
rmr எல்லா மாநிலத்தில் உள்ளவனயும் ஒரு அளவு இல்லாம குடியேற விட்டா என்ன ஆகும் இப்படி தான் நடக்கும் நீர் சேமிப்பு இல்லை அதற்கு ஒரு நல்ல திட்டமும் இல்லை சும்மா அப்புறம் என்ன ஒரு ஐம்பது வருசத்துல ஆட்சி செஞ்சவனுங்க எத்தனை ஏரி குளம் வெட்டுனாங்க ? ஒன்னும் இல்ல ஆனா எத்தனை ஏரி குளம் மூடுனானுங்க பல ஆயிரம் என்பது உண்மை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X