| ஆயிரம் வழக்குகளை தீர்க்க மக்கள் நீதிமன்றத்தில் நடவடிக்கை Dinamalar
ஆயிரம் வழக்குகளை தீர்க்க மக்கள் நீதிமன்றத்தில் நடவடிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 மார்
2019
07:01

ராமநாதபுரம்:''ராமநாதபும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஆயிரம் வழக்குகளில் சமரசம் செய்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தீர்வுகள் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (மார்ச் 9 ல்) நடக்கிறது. இது குறித்து முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி கூறியதாவது:கடந்த 2018 டிச., 8 ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. 1,369 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் 2,118 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கிற்கு முந்தைய நிலையில் 1,225 வழக்குகள் உள்ளன. மொத்தத்தில் சமரச தீர்வு காணும் நிலையில் 3,416 வழக்குகள் இனம் காணப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் 6 அமர்வுகள், ராமேஸ்வரம்,கமுதி, பரமக்குடி, திருவாடானை,முதுகுளத்துார், ஆகிய நீதிமன்றங்கள் 6 அமர்வுகள் உட்பட 12 அமர்வுகள் அமைக்கப்படவுள்ளன.ஜன., மாத்தில் இருந்து சமரசம் செய்யும் முயற்சியில் தேசிய மக்கள் நீதிமன்றம் 11 அமர்வுகள் நடத்தப்பட்டு, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுடன் சமரசம் பேசப்பட்டுஉள்ளது. இதில் குற்ற வழக்குகளில் சமரசம் காணக்கூடிய வழக்குகள், வங்கி கடன், கல்விக்கடன், செக் மோசடி, திருமணம் சம்பந்தப்பட்ட வழக்குகள், ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணவும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வழக்குகளில் சமரச தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X