| அரசு மருத்துவமனையில் பயனற்ற தண்ணீர் தொட்டி Dinamalar
அரசு மருத்துவமனையில் பயனற்ற தண்ணீர் தொட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 மார்
2019
07:02

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே பயனற்ற நிலையில் காட்சிப்பொருளாகவே தண்ணீர் தொட்டி உள்ளது.முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, சித்தா பிரிவுகள் இயங்கி வருகிறது. இங்கு உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்காக 60 படுக்கை வசதிகள் உள்ளது. தினமும் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றன.உள்நோயாளிகள் பிரிவில் ஆண்,பெண்,குழந்தைகளுக்கு தனித்தனியாக 10க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் உள்ளது.உள்நோயாளிகள் பிரிவில் மின்சாரம் இருந்தும் ஒவ்வொரு அறையிலும் ஒருசில மின்விசிறிகள் இயங்குகின்றன. ஒன்றிரண்டு பல்புகள் மட்டும் எரிகின்றன. மின்தடை ஏற்படும் போது மருத்துவமனையில் உள்ள அறைகளில் பல்புகள் எரியாமல் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுஉள்ளது. வளாகத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் வசதியுடன் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் தொட்டி எந்த பயனும் இல்லாமல் காட்சி பொருளாகவே உள்ளது. உள்நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவில் குடங்களில் வைத்துள்ள தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X