| முதல்நிலை காவலர் அந்தஸ்து வழங்காமல் இழுத்தடிப்பு Dinamalar
முதல்நிலை காவலர் அந்தஸ்து வழங்காமல் இழுத்தடிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 மார்
2019
07:02

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆண்டுகள் பணி முடித்தும்முதல்நிலை காவலர் அந்தஸ்து வழங்காமல் இழுத்தடிப்பதால், பதவி உயர்வு, பணபலன்கள் பெற முடியாமல் போலீசார் தவிக்கின்றனர்.மாவட்டத்தில் 2008 ல் போலீசாக பணியில் சேர்ந்த 300 க்கும்மேற்பட்ட போலீசார் சட்டம் ஒழுங்கு உட்பட மற்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசில் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முதல்நிலை காவலர் அந்தஸ்து வழங்கி பணிப்பலன்கள் கூடுதலாகவழங்கப்படும்.ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆண்டுகள் பணி முடித்துள்ள போலீசார் 300 க்கும் மேற்பட்டோர் இருந்தும பல மாதங்களாக முதல்நிலை காவலர் அந்தஸ்து வழங்காமல் மாவட்ட போலீஸ் நிர்வாகம் இழுத்தடிப்பு செய்கிறது.இதனால்உரிய பலன்களை அனுபவிக்க முடியாமல் தகுதியானபோலீசார் தவிக்கின்றனர். மற்ற மாவட்டங்களில் 10 ஆண்டுகள் பணி முடித்த போலீசாருக்கு முதல்நிலை காவலர் அந்தஸ்து வழங்கபட்டுள்ளபோதிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் அரங்கேறியள்ள இந்த கூத்தால், போலீசார் அதிருப்தியடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X