பயன்பாடின்றி உள்ள இடங்கள் மற்ற அலுவலகங்களுக்கு வழங்கப்படுமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2019
09:58

குளித்தலை: குளித்தலை நகராட்சி பகுதியில், ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான அரசு நிலங்கள் மற்றும் கட்டடங்கள் பல இடங்களில் உள்ளன. பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள அவற்றை மற்ற அரசு அலுவலகங்களின் பயன்பாட்டுக்கு விட, வலியுறுத்தப்பட்டுள்ளது.



குளித்தலை நகர பகுதியில், ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் செயல்படும் சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் பலவும் வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன. மேலும் அரசு அலுவலகங்களான மின்வாரிய அலுவலகங்கள், வேளாண்மை கோட்ட பொறியியல் துறை, குடிநீர் வடிகால் வாரியம், பத்திரப் பதிவு அலுவலகம், கால்நடை மருத்துவத்துறை அலுவலகங்கள், கூட்டுறவு சங்க அலுவலகங்கள் ஆகியவை, சொந்த கட்டடங்கள் இல்லாமல் வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன. மணத்தட்டை பகுதியில், புதர் மண்டி கிடந்த, ஒன்றியத்துக்கு சொந்தமான, 1.25 ஏக்கர் நிலம், அரசு போக்குவரத்துகழகத்திற்கு, அப்போதைய மக்கள் பிரதிநிதிகள் தானமாக வழங்கினர். அதில் தான் தாற்போது, குளித்தலை அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை செயல்படுகிறது. அதேபோல், குளித்தலை ரயில்நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள தச்சுப்பட்டறை, தாய்சேய் நலவிடுதி என, பல கட்டடங்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு காலியிடங்கள், பயன்பாடற்று உள்ளன. மேலும், தச்சுப் பட்டறை அருகே, நல்ல நிலையில் உள்ள கட்டடம் ஒன்று பயன்படுத்தப்படாமல் இருப்பதால், இரவு நேரத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் குடிமகன்கள் திறந்த வெளி பாராக பயன்படுத்துவதோடு, அங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.


மேலும், நகராட்சி பகுதியில், ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடங்களுக்கு, மக்கள் வரிப்பணத்தில் இருந்து, ஆண்டுதோறும் பல ஆயிரம் ரூபாய் சொத்துவரி கட்டப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் அரசு நிலங்களை ஆய்வு செய்து, தேவைப்படும் அரசு அலுவலகங்களுக்கு வாடகை கட்டடம் கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என, அதிகாரிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து யூனியன் கமிஷனர் ஆழ்வார் கூறுகையில், "யூனியன் நிர்வாகத்திற்கு சொந்தமான தச்சு பட்டறை உள்ள இடத்தில், வேறு அரசு கட்டடம் கட்ட, மாவட்ட நிர்வாகத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் கட்டப்படும்,” என்றார்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X