செந்தில்பாலாஜி வெற்றி எதிர்த்து போடப்பட்ட வழக்கால் அரவக்குறிச்சிக்கு தேர்தல் அறிவிப்பு இல்லை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2019
08:16

கரூர்: செந்தில்பாலாஜியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், தற்போது அரவக்குறிச்சிக்கு இடைத்தேர்தல் நடக்கவில்லை.


தமிழகத்தில், கடந்த, 2016 மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகார் காரணமாக, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதே ஆண்டு, நவம்பர் மாதம், 19ல் தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., சார்பில் செந்தில்பாலாஜி, தி.மு.க.,வில் பழனிசாமி, பா.ஜ.வில் பிரபு உட்பட, 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். செந்தில் பாலாஜி, 23 ஆயிரத்து, 661 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பழனிசாமியை வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட கீதா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி, செந்தில் பாலாஜி தொடர்ந்து வழக்கை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், லோக்சபா தேர்தலுடன் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்காமல், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, வழக்கு தொடுத்த கீதா கூறியதாவது: பணம் பட்டுவாடா புகார் காரணமாக ஒருமுறை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதே வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பணம் தாராளமாக வினியோககிக்கப்பட்டது. மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், எவ்வாறு கையெழுத்து பெற்றார் ஆகிய காரணங்களை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X