பாரம்பரிய விதை வங்கி நடத்தும் ஓய்வு ஆசிரியர்:ஒன்று கொடுத்தால் இரண்டு திருப்பி தர வேண்டும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2019
06:45

சாயல்குடி:கடலாடி, விளாத்திகுளம், திருப்புல்லாணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில ஓய்வு ஆசிரியர் ஒருவர் சிறு, குறு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை வங்கி நடத்தி வருகிறார். ஒன்று கொடுத்தால் இரண்டு உற்பத்தி செய்து தரவேண்டும் என்ற இவரது முயற்சிக்கு பாராட்டுகள் குவிகிறது.


சாயல்குடி அருகே வேம்பாரை சேர்ந்த ஓய்வு ஆசிரியர் லுாசியல் ஜாய் 59. இவர் 'பேடு' தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஐந்தாண்டுகளாக இப்புதிய முயற்சியில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். பாசிப்பயறு, தக்காளி, முள்ளங்கி, சிகப்பு தண்டு கீரை, சிகப்பு புளிச்சக் கீரை, பீர்க்கங்காய், சம்பா மிளகாய், பட்டை அவரை, வெள்ளை பூசணி, சிறுகீரை, அரைக்கீரை, பூனைக்கால் பீன்ஸ், பச்சை தண்டு கீரை, வெண்டை, பருப்பு கீரை, பாகற்காய், வெள்ளரி, தம்பட்ட அவரை, பாலக்கீரை, நாட்டுத்தக்காளி, நீள்சுரை, பவானி கத்தரி, மிதி பாகற்காய் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட காய்கறிகளின் விதைகளை சேகரித்து வருகிறார்.ஓய்வு ஆசிரியையும், தன்னார்வலருமான லுாசியல் ஜாய் கூறியதாவது:முந்தைய காலத்தில் விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்தனர்.


இயற்கை உரங்களையே பயன்படுத்தினர். இயற்கை விதைகளை பயன்படுத்தினர். அறுவடையின் போது அடுத்த விளைச்சலுக்காக விதைகளை சேகரித்தனர்.தற்போது பாரம்பரிய விதைக்கு மாற்றாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்தி சாகுபடி செய்வதால், அடுத்த விளைச்சலுக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் வரும் காலங்களில் விதை கிடைப்பதே அரிதாகும் நிலை ஏற்படும்.இதற்கு மாற்று ஏற்பாடாக கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய விதை வங்கி நடத்தி வருகிறோம்.


மண்பானையில் புன்னை மர, வேப்ப மர இலைகளை போட்டு அதனுள் விதையை போட்டு துணியால்மூடி பாதுகாக்க வேண்டும். எங்களிடம் 1 டம்ளர் விதைகளை விவசாயிகள் வாங்கினால். அதை சாகுபடி செய்து பயனடைந்த விவசாயிகள் அதற்கு கைமாறாக 2 டம்ளர் விதைகளை வங்கிக்கு தரவேண்டும். இந்த முயற்சிக்கு சுற்றுவட்டார கிராமங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முழுவதும் இயற்கை உரங்களை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுரையை தருகிறோம் என்றார். மேலும் விபரங்களுக்கு 89030 20572.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X