'பாடம் புகட்டுவோம்!'பல்லாவரத்தில் திராவிட கட்சிகளுக்கு எச்சரிக்கை: மக்கள் நல திட்டங்களில் தொடரும் உள் அரசியல்;பஸ் நிறுத்தம் அமைக்கும் விவகாரத்தில் விடாப்பிடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2019
04:53

குரோம்பேட்டையில், பஸ் நிறுத்தம் அமைக்கும் விவகாரத்தில், கொடி கம்பத்தை அகற்ற, அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக, தி.மு.க.,வினரும், கொடிகம்பம் உள்ள இடத்தில், வேண்டுமென்றே பஸ் நிறுத்தம் கட்டுவதாக, அ.தி.மு.க.,வினரும், மாறிமாறி புகார் தெரிவித்துள்ளனர்.


குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையில், தாம்பரம் மார்க்கமான சாலையில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வளர்மதி, அமைச்சராக இருந்தபோது, மாநகர பஸ்கள் நின்று செல்ல நிறுத்தம் அமைக்கப்பட்டது. அதனை ஒட்டி, வெளியூர் பஸ் நிறுத்தமும் உள்ளது.


இந்த நிறுத்தங்களில், போதிய வசதிகள் இல்லாததால், இரு நிறுத்தங்களுக்கு இடையில், பல்லாவரம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 25 லட்சம் ரூபாய் செலவில், புதிய நிறுத்தம் கட்டும் பணி, சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.அந்த இடத்தில், அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின், கொடி கம்பங்கள் இருந்தன. அவற்றை அகற்றுமாறு, தி.மு.க., சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.


அ.தி.மு.க.,வை தவிர, மற்ற கட்சியினர், தங்களது கொடி கம்பங்களை அகற்றினர்.ஆனால், முதல்வர் இ.பி.எஸ்., கொடி ஏற்றிய கம்பம் என்பதால், அதை அகற்ற, அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில், பேச்சு நடத்தியும், ஒத்துழைக்காமல், கம்பத்தை அகற்ற விடாமல், அ.தி.மு.க.,வினர் அடம் பிடித்தனர். இதனால், சில நாட்கள் பணிகள் தடைப்பட்டன.


தற்போது, அ.தி.மு.க., கொடி கம்பத்தை அகற்றாமல், நிறுத்தம் அமைக்கப்படுகிறது.அதே நேரத்தில், 'மக்கள் நல திட்டங்களை பாராமல், கொடி கம்பம் விஷயத்தில், அ.தி.மு.க.,வினர் அரசியல் செய்கின்றனர்' என, தி.மு.க.,வினரும், 'வேண்டுமென்றே, அ.தி.மு.க., கொடிகம்பம் உள்ள இடத்தில், தி.மு.க., எம்.எல்.ஏ., பஸ் நிறுத்தம் கட்டுகிறார்' என, அ.தி.மு.க.,வினரும் மாறிமாறி புகார் தெரிவித்துள்ளனர்.


பல்லாவரம் நகராட்சியில், 10 ஆண்டுகளாக, பல்வேறு மக்கள் நல திட்டங்களில், இரு திராவிட கட்சிகளும், மக்கள் பாதிக்கும் வகையில், தொடர்ந்து அரசியல் செய்து வருவதால், மக்கள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.லோக்சபா தேர்தலில், இதற்கான பாடம் புகட்டப்படும் என, குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


வளர்மதி அமைச்சராக இருந்த போது, கட்டப்பட்ட பஸ் நிறுத்தம் பாழடைந்துவிட்டது. நெடுஞ்சாலைகளில் கட்டப்படும் நிறுத்தங்களை, நெடுஞ்சாலைத் துறை தான் பராமரிக்க வேண்டும். எம்.எல்.ஏ., தொகுதி நிதியில், பராமரிப்பு பணி செய்ய முடியாது. இதை கருத்தில் கொண்டே, புதிய நிறுத்தம் கட்டப்படுகிறது. நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி பெற்று தான் பணி நடக்கிறது.


அ.தி.மு.க.,வினர் இதை புரிந்துகொள்ளாமல், கொடி கம்பத்தை அகற்றாமல், அரசியல் செய்கின்றனர்.தி.மு.க., நிர்வாகிகள்குரோம்பேட்டையில், ஏற்கனவே மூன்று பஸ் நிறுத்தங்கள் உள்ளன. அப்படி இருக்கையில், மேலும் ஒரு புதிய நிறுத்தம் தேவையில்லை. இருக்கும் நிறுத்தங்களை சீரமைப்பதை விட்டு, அரசியல் செய்வதற்காகவே, முதல்வர் ஏற்றி வைத்த கொடி கம்பத்தை அகற்ற, அங்கு புதிய நிறுத்தம் கட்டுகின்றனர்.


முதல்வர் ஏற்றி வைத்த கொடி கம்பத்தை அகற்ற, ஒப்புக் கொள்ள மாட்டோம்.அ.தி.மு.க., நிர்வாகிகள் பல்லாவரத்தில், 10 ஆண்டுகளாக, இரண்டு திராவிட கட்சிகளும், கீழ்த்தரமாக அரசியல் செய்து வருகின்றன. பாதாள சாக்கடை, குடிநீர், சாலைப்பணியில் துவங்கி, இன்று பஸ் நிறுத்தம் வரை, இரண்டு கட்சிகளும் மாறிமாறி அரசியல் செய்வது வாடிக்கையாகிவிட்டது. தேர்தலில், மக்கள் இதற்கு சரியான பாடம் புகட்டுவர்.

நலச்சங்க நிர்வாகிகள்

- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
14-மார்-201916:44:08 IST Report Abuse
Gopi மக்களின் சேவையில் கசமாள கட்சிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X