மோதல்! மதுரை ஆவினில் நிர்வாகத்திற்கு எதிராக .... 'மைக்' மூலம் ஒட்டு கேட்பதாக கொந்தளிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

15 மார்
2019
01:55
பதிவு செய்த நாள்
மார் 15,2019 01:39

மதுரைமதுரை ஆவினில் பெண் ஊழியர்களை களங்கப்படுத்தும் வகையில் செயல்பட்ட சிலருக்கு பொது மேலாளர் ஜெயஸ்ரீ துணையாக இருப்பதாக கூறி நேற்று அலுவலக பிரதான கதவை மூடியதோடு அதிகாரிகள், ஊழியர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

கடந்த ஓராண்டாக ஜெயஸ்ரீக்கும், பெரும்பாலான ஊழியர்களுக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது. இந்நிலையில் அதிகாரிகள் மற்றும் பெண் ஊழியர்கள் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களை களங்கப்படுத்தும் வகையில் 'மொட்டை பெட்டிஷன்களை' உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினர்.

இதை கண்டித்து நேற்று பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து ஆவின் முன் ஒரு மணி நேரம் ரோடு மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது.

அவர்கள் கூறியதாவது:ஆவினில் 2018, டிச.,ல் ஜெயஸ்ரீ பொறுப்பேற்றது முதல் மோதல் போக்கு நீடிக்கிறது. நிர்வாகத்தில் கணவர் அழகுராஜின் தலையீடு அதிகரித்துள்ளது. அவர் சொல்லும் கோப்புக்களில் கையெழுத்திட வேண்டும் என நிர்பந்திக்கிறார். இவருக்கு துறை அமைச்சரின் ஆதரவும் உள்ளதால் அழகுராஜா மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர். பல நேரங்களில் நிர்வாக கார்களில்தான் அழகுராஜா பயணிக்கிறார். அவர், மதுரை காமராஜ் பல்கலை யில் ஆராய்ச்சி படிப்பு படிக்கிறார். பல்கலைக்கு அலுவலக காரிலேயே பயணிக்கிறார். இதுகுறித்து போட்டோ ஆதாரங்களுடன் உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.

ஆவினில் மொத்தம் உள்ள 350 ஊழியர்களுக்கு ஓராண்டில் பலமுறை

இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்டோருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை பாதிக்கும் வகையிலான நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு கோப்புக்கள் நிலுவையில் போடப்பட்டுள்ளன.


ஒட்டுக்கேட்கும் கருவி


பெண் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் கம்ப்யூட்டரில் மைக்ரோ கேமரா பொருத்தியும், சிலரின் டேபிளுக்கு அடியில் மைக்ரோ ஸ்பீக்கர் வைத்தும் தனது அலைபேசியில் ஜெயஸ்ரீ கண்காணிக்கிறார். அவரை விமர்சிக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கைகள் பாய்கின்றன. குறிப்பிட்ட சில பெண் ஊழியர்கள் தொடர்ந்து பழிவாங்கப்படுகின்றனர். இந்நிலையில் மொட்டை பெட்டிஷனால் குடும்ப ரீதியாக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றனர்.


முக்கிய கோப்புகள் தேக்கம்


இச்சம்பவம் குறித்து துணைப் பதிவாளர் (பால்வளம்) கணேசன் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். இதுகுறித்து கருத்து கேட்க பொது மேலாளர் ஜெயஸ்ரீயை பலமுறை தொடர்புகொண்டும் அவர் அலைபேசியை எடுக்கவில்லை.

பொது மேலாளருக்கும், ஊழியர்களுக்கும் இடையே நடக்கும் பனிப்போரால் பல்வேறு முக்கிய கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. குறிப்பாக பால் மொத்த விற்பனை, கிராமங்களில் புதிய சொசைட்டிகளை உருவாக்குவது, ஊழியர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தொடர்பான ஏராளமான கோப்புக்கள் மாதக்கணக்கில் நிலுவையில் உள்ளதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


எனக்கே கணவர் தான் பதில் சொல்கிறார்

ஆவின் தலைவர் சொல்கிறார்


ஆவின் தலைவர் ஓ.ராஜா கூறியதாவது: தலைவராக பொறுப்பேற்றது முதல்

இப்பிரச்னை குறித்து என்னிடம் பலர் தெரிவித்து வருகின்றனர். பொது மேலாளரை அழைத்து பலமுறை அறிவுறுத்தினேன். ஆனாலும் பிரச்னைகள் நீடிக்கின்றன. அலுவல் பணி தொடர்பாக பொது மேலாளருக்கு நான் போன் செய்தாலே அவரது கணவர் தான் பதில் சொல்கிறார். 'அவரை அதிகாரம் செய்ய விடாதேம்மா'னு நானும் பலமுறை தெரிவித்துவிட்டேன். ஆவணங்கள் தேங்கி கிடக்கின்றன. பலருக்கு சம்பள பிரச்னை உள்ளது. என்னால் முடிந்த வரை ஆவினை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளேன். இதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-மார்-201906:44:02 IST Report Abuse
Bhaskaran தனியார் நிறுவனங்களிடம் காசு பெற்றுக்கொண்டு ஆவினை குழிதோண்டி புதைப்பது என்னும் முடிவில் செயல்படுபவர்களை எதுவுமே செய்யமுடியாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X