லோக்சபா தேர்தலை... 'புறக்கணிப்போம்!':தாம்பரத்தில் மக்கள் அதிரடி;அரசியல் கட்சிகளுக்கு சிக்கல்:வேட்பாளர் பாடு திண்டாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2019
05:12

தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வீசிவிட்டு, தொகுதி பக்கம் எட்டிக்கூட பார்க்காத, சுயநல அரசியல்வாதிகளால், நொந்து போன தாம்பரம் பகுதி மக்கள், 'நடக்க உள்ள லோக்சபாதேர்தலை புறக்கணிப்போம்' என, உறுதி எடுத்துள்ளனர்.


தேர்தல் காலம் என்றாலே, இதெல்லாம் நடக்குமா என, மக்கள் நினைக்கும் அளவிற்கு, வாக்குறுதிகளை அள்ளி வீசுவது, அரசியல் கட்சிகளின் வாடிக்கை.அப்படி தான், பல தேர்தல்களாக, ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் உள்ள தாம்பரத்திலும், ஓட்டுக்காக, மக்கள் பிரதிநிதிகள், வாக்குறுதிகளை அள்ளி வீசினர்.


ஆனால், 'குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு' என்பதை போல, 'அரசியல்வாதிகளின் பேச்சு, தேர்தல் முடிஞ்சதும் போச்சு' என்றாகவிடும்.இப்படி, தேர்தலுக்கு தேர்தல் ஏமாந்து போன, தாம்பரம் பகுதி மக்கள், 'லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம்' என்ற கோஷத்தை எழுப்ப துவங்கிவிட்டனர்.


தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட, ஏழு, ஒன்பது ஆகிய வார்டுகளில் உள்ள ஜாகீர் உசேன், அண்ணா, ஜீவா தெருக்கள் மற்றும் ரங்கநாதபுரம், ஐந்து, ஆறு, ஏழு தெருக்களில், 500க்கும் மேற்பட்டோர், 50 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கின்றனர்.இந்த இடம், வருவாய்த்துறை பதிவேட்டில், காப்பு காடு என, பதிவாகி உள்ளது.


இப்பகுதிகள் அடங்கிய, சர்வே எண், 392/1சி, 12.07 ஏக்கர் நிலப்பரப்பை,குடியிருப்புகளுக்கு ஒதுக்கீடு செய்து, வருவாய்த்துறை பதிவேட்டில், காப்பு காடுகள் என, பதிவாகி உள்ளதில் இருந்து விலக்களித்து, 1955ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.ஆனால், அரசாணை செயல் படுத்தப்படவில்லை.


குடியிருப்புகள் நிறைந்துள்ள இந்த பகுதியின் நில பதிவேட்டில், மாற்றம் செய்யப்படாததால், இங்கு வீடுகளை, வாங்கவோ, விற்கவோ முடியவில்லை. அவரவர், இஷ்டத்திற்கு சிலர் வீடு கட்டுகின்றனர்.பட்டா கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு, தாம்பரம் நகராட்சி கூட்டத்தில், தீர்மானம் இயற்றப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டஆட்சியரின் பார்வைக்கு, இப்பிரச்னை அனுப்பி வைக்கப்பட்டது.


அதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில், ஒன்பது முறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறைக்கு, மனு அளிக்கப்பட்டது. மேலும், எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்களுக்கும், முதல்வரின் தனிப்பிரிவிற்கும், பலமுறை மனு அளிக்கப்பட்டுவிட்டது.எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதி மக்களின், 64 ஆண்டுகால போராட்டமாக இப்பிரச்னை இருந்தும், ஆட்சியில் இருந்த இரண்டு திராவிட கட்சிகளும், பிரச்னையை தீர்க்கவில்லை. இதனால், தேர்தல் புறக்கணிப்பு முடிவுக்கு பகுதி மக்கள்வந்துள்ளனர்.


இது குறித்து, வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:


அரசாணை பிறப்பிக்கப்பட்ட போது, நகரளவை ஆவணங்களில், இந்த விபரங்கள் பதிவாக வில்லை. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் காஞ்சி புரம் மாவட்ட, நில அளவை உதவி இயக்குனர் ஆகியோருக்கு, பல முறை கடிதம் அனுப்பியும், எந்த பதிலும் இல்லை.நகரளவை ஆவணங்களில், காப்பு காடு என, பதிவாகி உள்ளதை ரத்து செய்து கொடுத்தால், வருவாய்த்துறை பதிவேட்டில் இருந்து, காப்பு காடுகள் என்பது நீக்கப்படும்.


அதன்பின், பட்டா பெறுவதில், சிக்கல் இருக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.50 ஆண்டுகளாக சாலை இல்லை!தாம்பரம் நகராட்சி, 38 வார்டு, அதிக பரப்பளவு கொண்டது. புலிகொரடு மலையை ஒட்டி அமைந்துள்ள, இந்த வார்டில், புலிகொரடு, வெட்டியாங்குண்டு, குண்டுமேடு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.இங்கு, 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு, சாலை மற்றும் குடிநீர் வசதிகள் போதிய அளவில் கிடைக்கவில்லை.


இதனால், அப்பகுதி மக்கள், நடைபெற உள்ள, லோக்சபா தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக, தெரிவித்துள்ளனர்.இது குறித்து, புலிகொரடு, பெரியார் நகரைச் சேர்ந்த, கண்ணன், 24, கூறியதாவது:சென்னை புறவழிச்சாலைக்கும், புலிகொரடு மலைக்கும் இடையே, எங்கள் பகுதி அமைந்துள்ளது. இதனால், மலையை ஒட்டிய வனப்பகுதி வழியாகவே, எங்களுக்கு சாலை அமைக்க முடியும்.


இதற்கு, வனத்துறை அனுமதி கிடைக்காததால், 50 ஆண்டுகளுக்கும் மேல், சாலை அமைக்கப் படாமல் உள்ளது.புலிகொரடு சந்திப்பு துவங்கி, ஊரின் எல்லை பகுதி வரை, 2 கி.மீ., துாரத்திற்கு மண் சாலையும், ஊருக்குள், 'சிமென்ட்' சாலையும், தாம்பரம் நகராட்சியால், 2014ல் அமைக்கப்பட்டது.


தாம்பரம் நகராட்சி கூட்டத்தில், மலையை ஒட்டிய வனப்பகுதிக்குள் சாலை அமைக்க, தீர்மானம் இயற்றப்பட்டு, பெங்களூரில் உள்ள, வனத்துறை அலுவலகத்திற்கு, அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு, தற்போது வரை, எந்த பதிலும் இல்லை.அதேநேரம், மலையை சுற்றி இருந்த, கல் குவாரிகளுக்கு சென்ற, டாரஸ் லாரிகளால், மண் சாலையும், நகராட்சியின் பராமரிப்பின்மை யால், சிமென்ட் சாலைகளும், ஓராண்டுக்கும் மேல் சேதமடைந்து காணப்படுகின்றன.


இதை, காரணம் காட்டி, மினி பஸ்கள் கூட, எங்கள் பகுதிக்கு இயக்கப்படுவதில்லை. இதனால், பள்ளி,- கல்லுாரி, மாணவ -- மாணவியர், பணிக்குச் செல்வோர் அவதியுறுகின்றனர்.இது ஒருபுறமிருக்க, நகராட்சி பகுதிகளில், மேற்கு தாம்பரத்திற்கு, பல்லாவரம் -- தாம்பரம் கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாகவும், கிழக்கு தாம்பரத்திற்கு, தாம்பரம் கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாகவும், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.


இதில், எங்கள் பகுதியை தவிர, மீதமுள்ளவற்றில், நேரடியாக வீடுகளுக்கு, குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு மட்டும், கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு, 10 நாட்களுக்கு ஒரு முறை தான், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.ஸ்ரீபெரும்புதுார், லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றவர்கள், இப்பிரச்னையை கண்டுகொள்ளாத தால், இந்த முறை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


ஜனநாயக கடமையில் தவறலாமா?


அரசியல்வாதிகளை, சாதாரண மக்கள், 'ஆட்டி வைக்கும்' காலம் தான் தேர்தல்; அதை சரியாக பயன்படுத்த வேண்டும். பொய்யான வாக்குறுதி அளிப்பவர்களையும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதவர்களையும் அடையாளம் கண்டு, அவர்களை வேண்டுமானால், மக்கள் புறக்கணிக்கலாமே தவிர, ஓட்டளிப்பு என்ற ஜனநாயக கடமையில் இருந்து தவறக்கூடாது.


உள்ளூர் அரசியல்வாதிகளின் பேச்சை கேட்காமல், பணம் வாங்காமல், தங்களுக்கான பிரச்னையில், உண்மையில் அக்கறை எடுத்து செயல்படும் வேட்பாளர் யார் என கண்டறிந்து, அவர்களுக்கு மக்கள் நிச்சயம் ஓட்டு போட வேண்டும். அப்போது தான், போலியான அரசியல்வாதிகளின் சாயமும் வெளுக்கும்; 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற தேர்தல் கமிஷனின் எண்ணமும் நிறைவேறும்!

- நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
16-மார்-201906:53:53 IST Report Abuse
Manian ஓட்டுக்கு காசும் கொடுத்து, விலை இல்லா அம்மா பாட்டில் தண்ணிரும் இலவசமாக குடுக்க காசுக்கு எங்கே போறதாம். குறைச்சு தண்ணி குடியுங்க- அரசியல் வியாதி, கடியார்க்கு நல்லார், தாம்பரம், திருடர்கள் கழகம்.
Rate this:
Share this comment
Cancel
kumar - chennai,இந்தியா
15-மார்-201921:26:11 IST Report Abuse
kumar தயவுசெய்து இம்முறையாவது நாம் எல்லாம் கோழை இல்லை என்பதை தெரியப்படுத்த, நோட்டாவுக்கு வாக்களிப்போம் வாக்கு கேட்டு வரும் நாளன்று, வீட்டைபூட்டி நம்முடைய எதிர்ப்பை காட்டுவோம். தமிழ்நாட்டின் பெருமையும், தனித்தன்மையும் காக்க இந்த தேர்தல் காலத்தை சரியாக பயன்படுத்துவோம் மக்கள் நலனையும், வருங்கால வளர்ச்சியும் பற்றி கவலைப்படாத கட்சித் தலைவர்களையும், அவர்களது குடும்பக் கொள்கைகளையும் உதாசீனப்படுத்துவோம் மாற்றத்தை நம் ஒவொருவரின் வீட்டிலுருந்து துவங்கி, நாளைய சமுதாயத்துக்கான நல்ல வழியும், வாழ்வு முறையும் மேம்பட நம்மால் முயன்றவரை உண்மையாக உழைப்போம் Nandri
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
15-மார்-201914:07:30 IST Report Abuse
ஜெயந்தன் நல்ல முடிவு. தவறாமல் ஒட்டு போட்டு, வெற்றி பெற்றவன் கோடிகளில் புரண்டதுதான் கண்டது. வாக்களித்தவர்கள், அவன் வீட்டு வசலில் தவம் கிடைத்ததுதான் மிச்சம். இவர்கள் 100 சதவீதம் வாக்கு பதிவு என்று சொல்லி, உலக அரங்கில் மார் தட்டி கொள்ள பார்க்கிறார்கள். மக்கள் வயிற்றில் அடி வாங்கியதுதான் அவர்கள் கண்ட பலன்...
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
20-மார்-201904:14:17 IST Report Abuse
Manianஅதெப்படி, இவிங்களுக்கு காசு கொடுத்தோம் அதை கந்து வட்டிக்கு கொடுத்திருந்தா இந்த கதி வருமா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X