போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் உடையார் வலசை மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2019
06:32

ராமநாதபுரம்:மண்டபம் ஒன்றியம் உடையார் வலசை கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் 2 கி.மீ., நடந்து சென்று தவிக்கின்றனர். மண்டபம் ஒன்றியம் பிரப்பன்வலசை அருகே உள்ளது எஸ்.மடை பஸ் ஸ்டாப். இங்கிருந்து 2 கி.மீ.,ல் உடையார் வலசை கிராமம் செல்லும் சாலை உள்ளது. இந்த ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இப்பகுதியில் பாலம் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர். இந்த சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. முறையாக பராமரிப்பு பணிகளை செய்யாததால் மக்கள் போக்குவரத்து வசதியின்றி தவிக்கின்றனர். இதனால் உடையார்வலசைக்கு செல்ல தில்லைநாச்சிபுரம் குடியிருப்பு வழியாக 4 கி.மீ., சுற்றி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தில்லைநாச்சியாபுரம் குடியிருப்பு வழியாக சாத்தக்கோன் வலசை, உடையார் வலசை, அரியமான் குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் இந்த சாலை அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் பல இடங்களில் தார் ரோட்டிற்கான அடையாளமே இல்லாமல் ரோடு உருக்குலைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் கிராமங்களுக்கு நடந்தே செல்லும் நிலை தான் உள்ளது. தினமும் உடையார்வலசையில் இருந்து பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் எஸ்.மடை பஸ் ஸ்டாப் வரை 2 கி.மீ., நடந்து சென்று தான் பஸ்சில் செல்ல வேண்டிய பரிதாப நிலை உள்ளது. எஸ்.மடை பஸ் ஸ்டாப்பில் டவுன் பஸ்கள் மட்டுமே நிறுத்தப்படுகின்றன. மற்ற பஸ்கள் அனைத்தும் நிறுத்தம் செய்யப்படுவதில்லை. பஸ் போக்குவரத்திற்காக எஸ்.மடை பஸ் ஸ்டாப்பில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இப்பகுதியில் சேதமடைந்துள்ள ரோட்டை சீரமைத்து பஸ் போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பஸ் வசதி இல்லைஆர்.கண்ணன், உடையார்வலசை: எங்களது கிராமத்திற்கு பஸ் வசதியில்லை. எஸ்.மடை பஸ் ஸ்டாப் பகுதியில் பஸ்கள் நிற்பதில்லை. இந்த சாலையில் உள்ள பாலம் சேதமடைந்துள்ளது. போக்குவரத்து வசதியில்லாததால் தினசரி நடந்தே செல்லும் நிலை உள்ளது. பள்ளி, கல்லுாரி, அலுவலகங்களுக்கு செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். அவதிப்படும் பெண்கள்கே.சுமதி, உடையார்வலசை: இரவு நேரங்களில் வெளியூர் சென்றுவிட்டு திரும்பினால் பெண்கள் மிகவும் அவதிப்படும் நிலை உள்ளது. எஸ்.மடை பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நிற்பதில்லை. தில்லைமடம் குடியிருப்பு, சாத்தக்கோன்வலசை, அரியமான் குடியிருப்புக்கு செல்ல 4 கி.மீ., வரை சாலை வசதி உள்ளது. இந்த சாலை முற்றிலும் சேதமடைந்து, தார் ரோட்டுக்கான அடையாளத்தை இழந்துள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை இல்லை. குடிமகன்கள் தொல்லைஜெயசித்ரா, உடையார் வலசை: ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் எஸ்.மடை பஸ் ஸ்டாப்பில் இருந்து 2 கி.மீ., நடந்து செல்லும் நிலை உள்ளது. அப்பகுதியில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை. மது அருந்திவிட்டு இந்த பாதையில் குடிகாரர்கள் அட்டகாசம் செய்கின்றனர். பாட்டிலை சாலையில் உடைத்து ரகளை செய்கின்றனர். இதனால் பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. ஆட்டோக்களுக்கு கூடுதல் தொகை செலவுஎஸ்.முனீஸ்வரி, உடையார் வலசை: எங்கள் கிராமத்திற்கு ரோடு வசதியில்லாததால், ஆட்டோக்களில் அதிக பணம் செலவிட்டு செல்லும் நிலை உள்ளது. அப்படி செல்லும் போது குண்டும், குழியுமான ரோட்டில் துாக்கி வீசப்படுவதால் இடுப்பு எலும்பு முறிந்து விடும் நிலை உள்ளது. அதிகாரிகள் முதல், அரசியல்வாதிகள் அனைவரிடமும் புகார் தெரிவித்துள்ளோம். இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X