| நிதி நெருக்கடியில் கிராம ஊராட்சிகள் தவிப்பு நான்கு மாதங்களாக சம்பளம் இல்லை Dinamalar
நிதி நெருக்கடியில் கிராம ஊராட்சிகள் தவிப்பு நான்கு மாதங்களாக சம்பளம் இல்லை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 மார்
2019
01:33



மதுரை,: மதுரை மாவட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் நிதி இல்லாததால், பணியாளர்களுக்கு நான்கு மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை.

கடந்த தீபாவளியின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அனைத்து ஊராட்சி பி.டி.ஓ.,க்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, ஊராட்சியின் எந்த கணக்கில் இருந்தாவது (மூன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் உள்ளன) பணத்தை எடுத்து ஊராட்சியின் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் தீபாவளிக்கு இரண்டு நாள் முன் சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி அப்போது நிலுவை சம்பளம் உட்பட அத்தனை பணியாளர்களுக்கும் பெரும் தொகை கிடைத்தது.

அதன் பின் மாநில நிதிக்குழு மானிய நிதி குறைவாக வந்தது. சொத்துவரி, தொழில்வரி வசூலும் சரியாக இல்லை. இதனால் மதுரை மாவட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் நிதி இருப்பு இல்லை.

இதனால் ஊராட்சி கிளார்க், குடிநீர் ஆப்பரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், கிராம துாய்மை காவலர்கள் உட்பட பல்வேறு தரப்பு பணியாளர்களுக்கும் நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. தேர்தல் நேரத்திலாவது சம்பளம் கிடைக்குமா என பணியாளர்கள் புலம்புகின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X