குடிநீர் பிரச்னை லோக்சபா தேர்தலில்... எதிரொலிக்குமா?:ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு;நிலைமையை சமாளிக்க வாரியம் வியூகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2019
05:20

சென்னை:பருவமழை கைகொடுக்காததால், கோடை துவங்கும் முன், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், சென்னை குடிநீர் ஏரிகளின் நீர்மட்டம், நாளுக்கு நாள் சரிந்து வருவதால், அடுத்த மாதம், நகரில் குடிநீர் பஞ்சம், மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை, லோக்சபா தேர்தலில், எதிரொலிக்கும் என, கருதப்படுகிறது.


சென்னை மாநகரில், 8 லட்சம் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, வாரியம் சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.இதற்காக, நாள் ஒன்றுக்கு, குடிநீர் வினியோகம் செய்ய, 83 கோடி லிட்டர் நீர் தேவை. கடந்தாண்டு, பருவமழை கைகொடுக்காததால், குடிநீர் ஆதாரங்கள் இன்றி, தட்டுப்பாடு ஏற்பட்டது.


இதனால், குடிநீர் வினியோக அளவை, 55 கோடி லிட்டராக வாரியம் குறைத்தது. தட்டுப்பாடு மேலும் அதிகரித்த சூழலில், தற்போது அது, 45 கோடி லிட்டராக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.குடிநீர் வினியோக மையத்தில், போதிய அழுத்தம்கிடைக்காமல், பல பகுதிகளுக்கு, குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.


இதனால், ஒப்பந்த அடிப்படையில், 600க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம், 6000 நடைகள் வீதம், தினசரி குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது.இம்மாத துவக்கத்தில், நான்கு குடிநீர் ஏரிகளின் மொத்த நீர் இருப்பு, ஒரு, டி.எம்.சி.,க்கு மேல் இருந்தது.தற்போது அது, 920 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது.இந்த நீர் இருப்பை கொண்டு, ஒரு மாதம் வரை கூட, நிலைமையை சமாளிக்க முடியாது.


தற்போதைக்கு, வீராணம் ஏரி மூலம், 18 கோடி லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. மீஞ்சூர் மற்றும்நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம், 20 கோடி லிட்டர் நீர் கிடைக்கிறது.ஏரிகள் முற்றிலும் வறண்டு போகும் பட்சத்தில், கல்குவாரி குட்டைகள் மற்றும் புறநகர் விவசாய கிணறுகளையே,வாரியம் பெரிதும் நம்பி உள்ளது.


புறநகர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் மூலம், 12 கோடி லிட்டர் தண்ணீர் பெறப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், இந்த கணக்கீட்டிற்கு உறுதியான ஆதாரம் இல்லை. அதுமட்டுமின்றி, புறநகர் பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளிலும், போதிய நீர் இருப்பு இல்லை.அடுத்தடுத்த தினங்களில், மேலும், ஏரிகளின் நீர் இருப்பு, சரிவை சந்திக்க துவங்கினால், அடுத்த மாதம், குடிநீர் தட்டுப்பாடு, உச்சத்தை அடையும்.


இதனால், பொதுமக்கள்கடும் பாதிப்புக்குள்ளாக நேரிடும். லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்த குடிநீர் தட்டுப்பாடு, தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
16-மார்-201915:43:22 IST Report Abuse
R chandar This is the high time v should increase the augmentation capacity of sea water to the maximum under new technology and make the supply through pipeline v should get the help of israel government for technology transfer and try for artificial rains by cloud seeding method at catchment area with the help of israel technology
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X