பெருங்களத்தூர் மேம்பால பணி முடிவது எப்போது? எம்.பி., ராமச்சந்திரன் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2019
05:25

ஐந்து ஆண்டுகளாகியும், பெருங்களத்துார் ரயில்வே மேம்பால பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதற்கு, ஸ்ரீபெரும்புதுார், எம்.பி.,யின் அலட்சியப் போக்கே காரணம் என, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


பெருங்களத்துார் ரயில் நிலையத்தில், மேம்பால பணிகளுக்காக, இரண்டு ரயில்வே பாதைகளில் ஒன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. அபாயம் நீடிப்புஒரே பாதை மட்டுமே போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளதால், பீர்க்கன்காரணை, பெருங்களத்துாரின் உட்பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கடும் நெரிசலில் பயணிக்கும் நிலைய உள்ளது.


இதற்கிடையில், இப்பகுதிகளுக்கு செல்லும் பாதசாரிகள், வாகன நெரிசலில் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர்.இந்த ஒரு பாதையும், விரைவு மின்சார ரயில்கள் கடக்கும் நேரத்தில், 20 முதல், 35 நிமிடங்கள் வரை, 'கேட்' மூடப்படுகிறது.இதனால், தினமும், காலை, மாலையில், பேருந்து பயணியர், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் அவலம் நீடிக்கிறது. இதனால், இருபுறங்களிலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.


ரயில் பாதை மூடப்படுவதால், நோயாளிகளுடன், 'ஆம்புலன்ஸ்' வாகனங்களும் சிக்குகின்றன. இது தவிர, அபாயகரமான வகையில், ரயில் தண்டவாளத்தை கடந்து உயிரிழப்போரின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், ரயில்வே சார்பில், மேம்பாலத்திற்கான துாண்கள் அமைக்கும் பணிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறையினரின் மெத்தனப் போக்கால், நான்கு ஆண்டுகளாக பணிகள் முடிவடையாமல் உள்ளன.


நினைவுச் சின்னம்


சில மாதங்களுக்கு முன், இந்த மேம்பால பணிக்காக, புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி, எஞ்சிய பணிகளை முடிக்க, 100 கோடி ரூபாய் தேவைப்படும் என, நெடுஞ்சாலைத் துறை சார்பில், அரசிடம் நிதி கோரப்பட்டது; அதற்கும், தற்போது வரை எந்த பதிலும் இல்லை.தென் மாவட்டங்களில் இருந்து வரும், வாகனங்கள் மற்றும் புறநகர் பகுதி வாகனங்கள் நுழையும் இடமாக, பெருங்களத்துார் சந்திப்பு உள்ளது.


முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பில், மேம்பால பணி அரை குறையாக விடப்பட்டு, நினைவு சின்னம் போல் காட்சியளிக்கிறது.இது குறித்து, பல்வேறு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். ஆனால், பதவியேற்று ஐந்து ஆண்டுகளாகியும், ஸ்ரீபெரும்புதுார், எம்.பி., ராமச்சந்திரன், இந்த பாலம் கட்டுமான பணிகளை துவக்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.

- -நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balasubramanian - chennai,இந்தியா
18-மார்-201911:43:49 IST Report Abuse
balasubramanian இந்த தொகுதியில் அவர் எந்த வளர்ச்சி பணியிலும் கவனம் செலுத்தவில்லை என்பதற்கு ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியில் பறக்கும் ரயில் முடங்கி போனதே ஒரு உதாரணம். நில ஆர்ஜிதம் பற்றி நீதி மன்றம் தெளிவான உத்தரவை கொடுத்து விட்டது. மக்கள் முக்கியம் வாய்ந்த ஒரு திட்டத்தில் ஆகும் தாமதத்திற்கு தன்னுடைய தீர்ப்பில் கண்டனமும் தெரிவித்து உள்ளது. இந்த தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சட்ட சபையில் கேள்வியும் எழுப்பி உள்ளார். ஆட்சி, கட்சி இரண்டுமே கண்டுகொள்ளவில்லை.
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
20-மார்-201904:25:23 IST Report Abuse
Manianஅது சரி, அப்பிடி இருந்தும் காசு வாங்கி ஏன் ஜனங்க அவருக்கு ஓட்டு போடுறாங்க?...
Rate this:
Share this comment
Cancel
venkat - chennai,இந்தியா
16-மார்-201914:44:04 IST Report Abuse
venkat இதுபோன்றே வண்டலூர் GST இருந்து மீஞ்சூர் பிரியும் ORR வெளிவட்டப் பாதையிலும், வண்டலூர் ரயில் நிலைய மேம்பாலத்தில் ஒரு பிரிவே முடிக்கப்பட்டு, மற்ற பிரிவுகள் பல வருடங்களாக துண்டு பட்டு நிற்கிறது. தினம் பல்லாயிரக்கணக்கான சாலை ஊர்திகள் பல கிலோமீட்டர் சுற்றி வண்டலூர் GST இருந்து ORR மணிமங்கலம் வழி மீஞ்சூர் செல்கிறார்கள். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மேம்பால வேலைகள் பலவும் விரைந்து முடித்து மக்கள் பயன்பெற எந்த கவனமும் செலுத்துவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
venkat - chennai,இந்தியா
16-மார்-201910:53:51 IST Report Abuse
venkat இதுபோன்றே வண்டலூர் GST இருந்து மீஞ்சூர் பிரியும் ORR வெளிவட்டப் பாதையிலும், வண்டலூர் ரயில் நிலைய மேம்பாலத்தில் ஒரு பிரிவே முடிக்கப்பட்டு, மற்ற பிரிவுகள் பல வருடங்களாக துண்டு பட்டு நிற்கிறது. தினம் பல்லாயிரக்கண சாலை ஊர்திகள் பல கிலோமீட்டர் சுற்றி ORR இருந்து வண்டலூர் நோக்கி GST ல் இணைகிறார்கள். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மேம்பால வேலைகள் பலவும் விரைந்து முடித்து மக்கள் பயன்பெற எந்த கவனமும் செலுத்துவதில்லை.
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
20-மார்-201904:26:30 IST Report Abuse
Manianஅது சரி, எல்லாமே செஞ்ச எம்பிக்களுக்கு மக்கள் சிலை வைத்தார்களா - மாஜி எம்பி மருதான நம்பி ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X