பிளாஸ்டிக் பாய்களால் கோரைப்பாய்க்கு மவுசு குறைவு: உற்பத்தியாளர்கள் கலக்கம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2019
09:54

கரூர்: பல வண்ணங்களில் பிளாஸ்டிக் பாய்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், கோரைப்பாய்க்கு மவுசு குறைந்ததால், பாய் உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


கரூர் மாவட்டத்தில், காவிரியாற்றங்கரைப் பகுதிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் கோரை சாகுபடி செய்யப்படுகிறது. இதில், தயாரிக்கப்படும் பாய், உடலுக்கு குளிர்ச்சி தரும். திருமண சடங்குகளில், கோரைபுல்லில் நெய்த பாய்க்கு முக்கிய இடம் உண்டு.


உற்பத்தி குறைந்தது: இந்நிலையில், பல்வேறு வண்ணங்களில், 10 ஆண்டுகளுக்கு முன் பிளாஸ்டிக் ஒயர்களால் தயாரிக்கப்பட்ட, பாய்கள் விற்பனைக்கு வந்தன. இதனால், கோரைப்பாய்க்கு படிப்படியாக மவுசு குறைந்தது. கரூர் மாவட்டத்தில், செவிந்திப்பாளையம், அச்சமாபுரம், கடம்பங்குறிச்சி, நெரூர் உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆண்டுகளுக்கு முன், 150 க்கும் மேற்பட்ட தறிகளில் கோரைப்பாய் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, 50க்கும் குறைவான தறிகளில் மட்டுமே, கோரைப்பாய் தயார் செய்யப்படுகிறது.


அதிக செலவு: இதுகுறித்து, கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கடந்த மூன்று மாதங்களாக, போதிய மழை இல்லாதால், கோரைப்புல் சாகுபடி குறைந்து, விலை அதிகரித்து விட்டது. பல டிசைன்களில் கலர் கலராக பிளாஸ்டிக் பாய்கள் விற்பனைக்கு வந்து விட்டதால், கோரைப்பாய்க்கு மவுசு குறைந்து விட்டது. இதனால், கோரைப்புல்லுக்கு கலர் போட அதிக செலவு செய்ய வேண்டும். ஒரு தறியை ஏற்பாடு செய்ய, ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. மின்சார கட்டணம், ஆட்கள் கூலி செலவு போன்றவற்றால் பெரிய அளவில் லாபம் இல்லை. பிளாஸ்டிக் பாய் வருகையால், கோரைப்பாய் குறைந்தபட்சமாக, 60 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. திருமண சீசன் காலங்களில் மட்டும் பாய் விற்பனை சுமாராக இருக்கும்.


அரசு உதவுமா? பெஞ்ச் வசதி இல்லாத அரசு துவக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம், சத்துணவு மையம், கோவில்கள் மற்றும் அரசு அலுவலகங்களில், கோரைப் பாயை பயன்படுத்த, அரசு உத்தரவிட வேண்டும். இதனால், கூடுதல் வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X