| 'என்.ஆர். காங்., வெற்றி பெறும்': ரங்கசாமி 'திட்டவட்டம்' Dinamalar
'என்.ஆர். காங்., வெற்றி பெறும்': ரங்கசாமி 'திட்டவட்டம்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 மார்
2019
23:33

புதுச்சேரி:சுறுசுறுப்பாக பணியாற்றுவார் என்பதற்காக இளைஞரான கே.நாராயணசாமியை புதுச்சேரி லோக்சபா தொகுதி வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக என்.ஆர்.காங்., தலைவர் பேசினார். புதுச்சேரி லோக்சபா தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று அண்ணாமலை ஓட்டலில் நடந்தது.


கூட்டத்தில் என்.ஆர்.காங்., பொதுச்செயலர் பாலன், எம்.எல்.ஏ.,க்கள் ஜெயபால், சுகுமாறன், செல்வம், கோபிகா, சந்திரபிரியங்கா அ.தி.மு.க., மாநில செயலர் புருஷோத்தமன், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.,க்கள் செல்வகணபதி, சங்கர். பா.ம.க., மாநில துணை தலைவர் சத்தியநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு தலைமை தாங்கிய என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி, வேட்பாளர் கே.நாராயணசாமியை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்பதாலும், முதியவரை விட இளைஞர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றுவது மட்டுமின்றி சோர்வு என்பதே ஏற்படாது.


இதை கருத்தில் கொண்டு புதுச்சேரி லோக்சபா தொகுதியில் என்.ஆர். காங்., வேட்பாளராக இளைஞரை நிறுத்தியுள்ளேன். அவரால் இந்த தொகுதிக்கு சிறப்பாக பணியாற்ற முடியும். புதுச்சேரி பகுதி மக்கள் அதிக வாக்குகள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது


.புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து எங்களின் இலக்கு. அது கிடைத்து விட்டால், அதிகாரம் மட்டுமின்றி எல்லாமே புதுச்சேரிக்கு கிடைத்துவிடும். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயர் தகுந்த நேரத்தில் அறிவிக்கப்படும். எங்களை பற்றி இந்த தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும் என்பதால், அவர்கள் என்.ஆர். காங்.,க்கு தான் ஓட்டு போடுவார்கள்.இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X