| புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையுடன் தேர்தல் நடத்திய பள்ளி மாணவர்கள் Dinamalar
புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையுடன் தேர்தல் நடத்திய பள்ளி மாணவர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 மார்
2019
23:35

புதுச்சேரி:தேர்தல் துறைக்கே சவால் விடும் வகையில் ஆரோவில் இசை அம்பலம் பள்ளி மாணவர்கள், வாக்காளர் அடையாள அட்டை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தலை நடத்தி முடித்துள்ளனர்.


புதுச்சேரி அடுத்துள்ள சர்வதேச நகரமான ஆரோவிலில் இயங்கி வரும் இசை அம்பலம் என்ற பள்ளியில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 135 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆரோவில் நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வரும் இப்பள்ளியில், நாட்டின் தேர்தல் எப்படி நடக்கிறது என்பதை மாணவர்களுக்கு புரிய வைக்க, மாணவர் தேர்தல் நடத்த பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்தது.தேர்தல் பணியை பள்ளி நிர்வாகம் மாணவர்களிடமே ஒப்படைத்தது.ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன், பள்ளி மாணவர்களில் ஒரு குழுவினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் துவங்கியது.அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து வழங்கப்பட்டது. வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. மனு தாக்கல் நடந்தது. கே.எம்.கே., வி.எம்.கே. என்ற இரு கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பள்ளி முழுவதும் ஆதரவு கேட்டு போஸ்டர், பேனர்களும் ஒட்டப்பட்டது.ஓட்டுப்பதிவு பள்ளி வளாகத்தில் நேற்றுநடந்தது. தேர்தலுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை மாணவர்களே தயார் செய்தனர். இதற்கான சாப்ட்வேர் எழுதி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தயார் செய்யப்பட்டது. இதில் 2 கட்சிகள், நோட்டாவுக்கு ஒட்டுபதிவு செய்ய பட்டன் அமைக்கப்பட்டு இருந்தது.


ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் லேப்டாப் ஒன்றும் இணைக்கப்பட்டுஇருந்தது.ஓட்டுப்பதிவுக்கு வரும் மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு, கையில் மை வைத்து ஓட்டுப்பதிவு இயந்திரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மறைவான இடத்தில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தங்களின் ஓட்டுக்களை மாணவர்கள், ஆசிரியர்கள் பதிவு செய்தனர். ஓட்டுப்பதிவு முடிந்து 'சீல்' வைக்கப்பட்ட இயந்திரம், தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது.ஓட்டு எண்ணிக்கை வரும் 25ம் தேதி நடக்கிறது. அன்றே முடிவுகள் அறிவித்து, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்களின் நேர்த்தியான இந்த செயல், தேர்தல் துறைக்கே சவால் விடும் வகையில் அமைந்திருந்தது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X