| உலக தண்ணீர் தினம் Dinamalar
உலக தண்ணீர் தினம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 மார்
2019
00:36

புதுச்சேரி;புதுச்சேரி, எக்கோல் ஆங்கிலேஸ் அரசு தொடக்கப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாணவர் பரணி வரவேற்றார். தண்ணீரின் முக்கியத்துவம் குறித்தும் அதன் அவசியம் பற்றியும் மாணவர்கள் கலந்துரையாடினர். பின், மாணவர்கள் தண்ணீர் தின சேமிப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்றனர். தண்ணீர் தினம் தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர் ராகுல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி தியா நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X