| தினகரன் முகம்தான் எங்கள் சின்னம்; கூறுகிறார் தென்காசி அ.ம.மு.க., வேட்பாளர் Dinamalar
தினகரன் முகம்தான் எங்கள் சின்னம்; கூறுகிறார் தென்காசி அ.ம.மு.க., வேட்பாளர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 மார்
2019
05:01

ஸ்ரீவில்லிபுத்துார்: ''அ.ம.மு.க.,வின் துணை பொது செயலாளர் தினகரன் முகம் தான் எங்கள் சின்னம்,''என, தென்காசி லோக்சபா தொகுதி வேட்பாளர் பொன்னுதாய் கூறினார்.



ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் கூறியதாவது:தென்காசி தொகுதி முன்னாள் எம்.பி.,வசந்தி முருகேசன் நன்றி சொல்ல வரவில்லை. நாங்கள் வெற்றி பெற்று விருதுநகர்-கொல்லம் ரயில்பாதையை இரட்டை பாதையாக்கி கூடுதல் ரயில்கள் இயக்க வலியுறுத்துவோம். மாம்பழம்கூழ் தொழிற்சாலை அமைத்தல், அழகர் அணை திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் குடிநீர், போக்குவரத்து போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பேன்.



தாழ்த்தபட்டோருக்கான பட்டியிலிலிருந்து தேவேந்திரகுலத்தினரை எடுக்கவேண்டும் என கூறும் கிருஷ்ணசாமி ஏன் தனித்தொகுதியில் போட்டியிடுகிறார். ஓன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் கிருஷ்ணசாமியை தோற்கடிப்பேன். கட்சியின் துணை செயலாளர் தினகரன் முகம்தான் எங்கள் கட்சியின் வெற்றி சின்னம். மக்கள் தான் எங்கள் கூட்டணி. குடிக்கு அடிமையாகும் ஆண்களால்தான் தினமும் பல பெண்கள் கணவனை இழந்து தவிக்கிறார்கள். குடிப்பதை நிறுத்தினால் குடிப்பவர்கள் கை உதறும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறுகிறார்.இதை மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள்,என்றார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X