| பாரதிநகரில் நிழற்குடைகள் அமைக்கப்படுமா Dinamalar
பாரதிநகரில் நிழற்குடைகள் அமைக்கப்படுமா
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 மார்
2019
06:53

மதுரை: மதுரை மாநகராட்சி 4வது வார்டு பாரதிநகர், மகாத்மாகாந்திநகர் பஸ் ஸ்டாப்புகளில் நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என விஸ்வநாதபுரம் (விரிவாக்கம்) குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.இச்சங்க செயலர் ேஷக் உசேன், தலைவர் ஞானகுருபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாநகராட்சி கமிஷனர் விசாகனிடம் இதுகுறித்து மனு அளித்தனர்.பின் அவர்கள் கூறியதாவது: பாரதிநகர், மகாத்மாகாந்தி நகரில் தினமும் ஏராளமான குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. அதற்கு ஏற்ப பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஆனால் இங்குள்ள பஸ் ஸ்டாப்புகளில் நிழற்குடைகள் இல்லை. இதனால் வெயிலில் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே நிழற்குடைகள் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாரதிநகர் தொலைபேசிநகர் வடக்கு தெரு, நேதாஜி 1, 2வது தெரு, அகஸ்தியர் தெருவிலுள்ள மின் கம்பங்களில் எல்.இ.டி., பல்புகளை பொருத்தவும் மாநகராட்சி முன்வர வலியுறுத்தினோம் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X