மாநகராட்சி வார்டு பிரச்னை களைய நடவடிக்கை! 20 கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2019
07:00

மதுரை: மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் நிலவும் குடிநீர், சாக்கடை உள்ளிட்ட பிரச்னைகளை உடனுக்குடன் களைய 20 கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து கமிஷனர் விசாகன் உத்தரவிட்டு உள்ளார்.



அனைத்து வார்டுகளிலும் அடிக்கடி குடிநீர், குழாய் உடைப்பு, சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. வார்டுகளில் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தப்படாதது, தெரு விளக்குகள் எரியாதது போன்ற பிரச்னைகளும் எழுகின்றன. இப்பிரச்னைகளை மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல கால் சென்டர் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் இப்பிரச்னைகளை தீர்க்க இந்த சென்டரில் புகார் தெரிவிக்கின்றனர். இதுதவிர வாட்ஸ்ஆப், பேஸ்புக், மாநகராட்சி வலைதளம் மூலமும் மாநகராட்சி கமிஷனரிடம் புகார் செய்யும் வசதியும் உள்ளது.



ஆனால் எல்லா வகையிலும் பொது மக்கள் புகார் அளித்தாலும் பிரச்னைகளை களைய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதற்கிடையில் பொதுமக்களின் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய 20 கண்காணிப்பு அலுவலர்களை கமிஷனர் விசாகன் நியமித்துள்ளார்.



உதவி கமிஷனர், மேற்பார்வை பொறியாளர், சுகாதார அலுவலர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் பதவியிலுள்ள 20 அலுவலர்களை மண்டலத்துக்கு தலா ஐவர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 100 வார்டுகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வார்டுகளில் எழும் புகார்களுக்கு இவர்களே பொறுப்பு.



அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த கண்காணிப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய வாட்ஸ் ஆப் குழு துவக்கப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலிருந்து எழும் புகார்கள் இதில் பகிரப்படும். புகார்கள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு கமிஷனருக்கு அறிக்கை யை படத்துடன் அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X