| தேர்தல் விழிப்புணர்வுக்கு நூதன மொய் விருந்து Dinamalar
தேர்தல் விழிப்புணர்வுக்கு நூதன மொய் விருந்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மார்
2019
07:25

தஞ்சாவூர்: 'தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி, பேராவூரணியில், தேர்தல் விழிப்புணர்வு மொய் விருந்து நடத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரங்களில், ஆடி மாதங்களில் நடத்தப்படும் மொய் விருந்தில், கோடி ரூபாய் வரை புழக்கம் இருக்கும். இந்நிலையில், தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அண்ணாதுரை உத்தரவின்படி, நேர்மையான மற்றும் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில், தேர்தல் விழிப்புணர்வு மொய் விருந்து நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, 'விவிபேட்' இயந்திரத்தில் ஓட்டளித்து, தாங்கள் யாருக்கு ஓட்டளித்தோம் என, அறிந்து கொண்டனர். மொய் விருந்துக்கு வந்தவர்களுக்கு சந்தனம், பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டு, தேநீர் விருந்து வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X