| அணைக்கரை குடியிருப்புக்குள் புகுந்த முதலை Dinamalar
அணைக்கரை குடியிருப்புக்குள் புகுந்த முதலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மார்
2019
07:25

தஞ்சாவூர்: கும்பகோணத்தில், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றிலிருந்து, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையை, தீயணைப்பு துறையினர் பிடித்து கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம், அணைக்கரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் எப்போதும், தண்ணீர் தேங்கியிருக்கும். மழை வெள்ளத்திலும், ஆற்றில் தண்ணீர் வறண்டு போகும் போதும், அங்குள்ள முதலைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடும்.நேற்று காலை, நாகலட்சுமி,40, என்பவர் வீட்டின் பின் பகுதியில் முதலை ஒன்று ஊர்ந்து வந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு நிலையத்துக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.திருவிடைமருதூர் தீயணைப்பு வீரர்கள், 8 அடி நீளமுள்ள முதலையை பிடித்து, கொள்ளிடம் ஆற்றில் விட்டனர் .

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X